Asianet News TamilAsianet News Tamil

மக்களே உஷார்.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த பகுதிகளில் பெய்ய போகிறது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.

29.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

 

People be Alert .. It is going to rain in these areas for the next 4 days .. Weather warning.
Author
Chennai, First Published Dec 29, 2021, 1:41 PM IST

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த  சில தினங்களாக வறண்ட வானிலை நிலை வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் டிசம்பர் மாத துவக்கம் வரை தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நவம்பர் மாதத்தில் மட்டும் மூன்று முறை  சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

ஒரு மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களில் கொட்டித்தீர்த்ததையும் காண முடிந்தது.  இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக மாறியது. பெரும்பாலான ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல்  நவம்பர் 28 வரை 704.03 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி உள்ளது. 446.7 மில்லி மீட்டர் அளவே மிதமான மழை ஆகும், ஆனால் அதைத்தாண்டி மழையின் அளவு 58 சதவீதம் அளவுக்குக் கூடுதலாக பதிவாகியுள்ளது. அதாவது தட்பவெப்ப சூழல் மாறி வரும் நிலையில் மேக வெடிப்புகள் காரணமாக இது போன்ற அதீத மழை பெய்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அதுகுறித்து விளக்கம் அளித்தது.

People be Alert .. It is going to rain in these areas for the next 4 days .. Weather warning.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து பனி பெய்து குளிர் வாட்டி வருகிறது. பகல் நேரத்திலும் பனிப்பொழிவு இருந்து வந்தாலும் காலை மற்றும் மாலையில் குளிர் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் வரண்ட வானிலையே நிலவி வந்த நிலையில், இன்று காலை நேரத்திலேயே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- 29.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழக கடற்கரையை நோக்கி நகரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  30.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். 31.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 01.01.2022: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 02.01.2022: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

People be Alert .. It is going to rain in these areas for the next 4 days .. Weather warning.

மூடுபனி எச்சரிக்கை : 29.12.2021, 30.12.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும்   அதனை ஒட்டிய பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான   மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): திருப்பூண்டி (நாகப்பட்டினம்), தலைஞாயர் (நாகப்பட்டினம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) தலா 1.மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios