Asianet News TamilAsianet News Tamil

மக்களே உஷார்.. 10 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப் போகிறது.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும், பருத்தி ஆடைகளையே அணியவும்

People are alert .. 10 districts are going to be crushed .. Meteorological Center warning ..
Author
Chennai, First Published Apr 19, 2021, 1:15 PM IST

வெப்பச்சலனம் காரணமாக 19.04.2021: நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். எனவும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், 20.04.2021:  நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, சிவகங்கை மற்றும் விருதுநகர்  மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம எச்சரித்துள்ளது. 

People are alert .. 10 districts are going to be crushed .. Meteorological Center warning ..

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். எனவும், 21.04.2021 முதல் 23.04.2021 வரை:  மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும்,சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு  வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். எனவும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

People are alert .. 10 districts are going to be crushed .. Meteorological Center warning ..

வெப்பநிலை முன்னறிவிப்பு : 20.04.2021 முதல் 21.04.2021 வரை:  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். 

People are alert .. 10 districts are going to be crushed .. Meteorological Center warning ..

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 80 விழுக்காடு வரை இருக்கக்கூடுமென்பதால்  பிற்பகல் முதல் காலை வரை  வெக்கையாகவும்,  இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும், பருத்தி ஆடைகளையே அணியவும்.கடந்த 24 மணி நேரத்தில்  மழை அளவு (சென்டிமீட்டரில்): ராசிபுரம்  (நாமக்கல்) 3, ஓட்டப்பிடாரம்  (தூத்துக்குடி), பெரியாறு   (தேனி), மசினகுடி  (நீலகிரி) தலா 2, ஆண்டிபட்டி  (மதுரை), தக்கலை  (கன்னியாகுமரி), சங்கரிதுர்க்  (சேலம்), தேக்கடி  (தேனி), பெருஞ்சாணி  அணை (கன்னியாகுமரி) தலா   1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios