Asianet News TamilAsianet News Tamil

கிராம பெண்களின் சேலையை துவைக்கும் தண்டனை வழங்கிய நீதிபதி... அவருக்கே ஆர்டர் போட்ட உயர்நீதிமன்றம்..!

 பாட்னா ஐகோர்ட் நிர்வாகம்  ஒரு உத்தரவை வழங்கி உள்ளது மறு உத்தரவு வரும் வரை நீதி மன்ற  பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பீகார் ஐகோர்ட்டு நீதிமன்ற நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

Penalty for washing the sarees of village women: The judge is barred from observing the court proceedings
Author
Tamil Nadu, First Published Sep 25, 2021, 4:35 PM IST

பீகார் மாநிலத்தில் மதுபானி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் அனைத்து பெண்களின் ஆடைகளையும் இலவசமாக 6 மாத காலம் துவைத்து அயர்ன் செய்து தரவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதியை நீதிமன்ற பணிகளை மறு உத்தரவு வரும் வரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. Penalty for washing the sarees of village women: The judge is barred from observing the court proceedings

பீகார் மாநிலம், மதுன்பானியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒரு பெண்ணை பாலியல் தொல்லை செய்துள்ளார். அவரை கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது குற்றவாளி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர் குறைந்த வயதுடையவர்.  கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிறையில் இருக்கிறார்.  ஆகையால்  அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.

இதனை கேட்ட நீதிபதி ஐநாஷ்குமார், ’இளம்வயது என்பதால் குற்றம் செய்ய அனுமதிக்க முடியாது. ஆனாலும் அவருடைய வயதை கருதி ஜாமீனில் விடுதலை செய்கிறோம். ஆனால் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களின் துணிகளையும் அவர் 6 மாதத்துக்கு துவைத்து அயர்ன் செய்து வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு இருந்தார். Penalty for washing the sarees of village women: The judge is barred from observing the court proceedings

மனுதாரரின் வழக்கறிஞரும் இதற்கு சம்மதம் தெரிவித்து அதற்கான பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். குற்றவாளி துணி துவைக்கும் தொழில் செய்வதால் இப்படியொரு உத்தரவை நீதிபதி வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த தீர்ப்புக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.  இது தொடர்பாக பாட்னா ஐகோர்ட் நிர்வாகம்  ஒரு உத்தரவை வழங்கி உள்ளது மறு உத்தரவு வரும் வரை நீதி மன்ற  பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பீகார் ஐகோர்ட்டு நீதிமன்ற நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios