Asianet News TamilAsianet News Tamil

வசந்தகுமார் எம்பி கடந்து வந்த பாதைகள்..! தொழில்..அரசியல் இரண்டிலும் இமயத்தை தொட்டது எப்படி.?

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள வசந்தகுமாருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இரவு 7 மணியளவில் உயிரிழந்ததாக தகவல் வெளியான செய்தி கேட்டு காங்கிரஸார் சோகத்தில் முழ்கினர்.இந்த துயரச்செய்தி கேட்டு கன்னியாகுமரி மக்கள் பெரும் சோகத்தில் முழ்கியிருக்கிறார்கள்.
 
Paths traversed by Vasantha Kumar MP ..! How did you touch the Himalayas in both industry and politics?
Author
Kanyakumari, First Published Aug 28, 2020, 8:32 PM IST

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள வசந்தகுமாருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இரவு 7 மணியளவில் உயிரிழந்ததாக தகவல் வெளியான செய்தி கேட்டு காங்கிரஸார் சோகத்தில் முழ்கினர்.இந்த துயரச்செய்தி கேட்டு கன்னியாகுமரி மக்கள் பெரும் சோகத்தில் முழ்கியிருக்கிறார்கள்.

Paths traversed by Vasantha Kumar MP ..! How did you touch the Himalayas in both industry and politics?

 கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் என்னும் ஊரில் 1950-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி அன்று பிறந்தவர் வசந்தகுமார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், விஜிபி நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்தார். மிகச் சிறிய முதலீட்டைக் கொண்டு மளிகைக் கடையைத் தொடங்கி பின்னர் விஜிபி பாணியில் தவணைப்பொருட்கள் வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கி படிப்படியாக முன்னேறி வசந்த் அண்ட் கோ என்னும் வணிக நிறுவனத்தைத் தொடங்கினார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய பல மாநிலங்களில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்துக்குக் கிளைகள் விரிவாக்கினார்.

வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார். 2016-ம் ஆண்டு நாங்குநேரி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட வசந்தகுமார், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கூட்டணியில் நின்று வெற்றிபெற்று எம்.பி.ஆனார்.

Paths traversed by Vasantha Kumar MP ..! How did you touch the Himalayas in both industry and politics?

மிகுந்த தமிழ்ப்பற்றும், மக்கள் பணியில் ஆர்வமும், எளிய முறையில் அனைவருடனும் பண்புடன் பழகக்கூடியவர் வசந்தகுமார். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்தார். சமீபகாலமாக அவர் சென்னையில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், கொரோனா பரிசோதனை செய்தபோது வசந்தகுமாருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவிக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு 10-ம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Paths traversed by Vasantha Kumar MP ..! How did you touch the Himalayas in both industry and politics?

 கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம் எனும் ஊரில், ஹரிகிருஷ்ண நாடார் - தங்கம்மை தம்பதிக்கு 14 ஏப்ரல் 1950ல் மகனாக பிறந்தார். 1970களின் தொடக்கத்தில் விற்பனையாளராக தனது வாழ்வை துவங்கினார். 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சூர்யகுமாரை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினரானார். 2019ல் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த அவர், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான ஹரிகிருஷ்ணன் வசந்தகுமார், தமிழகம் முழுவதும் உள்ள வீட்டுஉபயோகப் பொருட்களின் சில்லறை விற்பனையகமான வசந்த்&கோவின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் என்ற வகையில் பிரபலமடைந்தவர்.1970களில் விற்பனையாளராக தனது வாழ்க்கையை துவங்கிய இவர், இன்று தமிழகம் முழுவதும் வீட்டுஉபயோகப் பொருட்களின் சில்லறை விற்பனையகமான வசந்த்&கோவின் உரிமையாளர்.

Paths traversed by Vasantha Kumar MP ..! How did you touch the Himalayas in both industry and politics?

ஆரம்பத்தில் மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பொருட்களை விற்று, அவற்றிற்கு தவணை முறையில் பணம் வசூலித்தார். சென்னை 600028, நாடோடிகள் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.2008ஆம் ஆண்டு வசந்த டிவி எனும் தொலைக்காட்சியை துவங்கினார். வெற்றிகொடிகட்டு எனும் இவரது பிரபல சுயசரிதை புத்தகத்தை ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி இணைந்து வெளியிட்டனர்.மேலும் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

Paths traversed by Vasantha Kumar MP ..! How did you touch the Himalayas in both industry and politics?

தீவிர சமூக சேவகரான இவர், ஏழை மாணவர்களுக்கு இலவச டியூசன் மையங்களை அமைந்து கொடுத்துள்ளார். மேலும் தெருவோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் பயன்பெரும் வகையில் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தையும் துவக்கினார்.வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான அகத்தீஸ்வரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடக்கும் எனத் தெரிகிறது.வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
Follow Us:
Download App:
  • android
  • ios