Asianet News TamilAsianet News Tamil

இசை வேளாளருக்கு ஏராளமான சலுகைகள்! வன்னியருக்கு பட்டை நாமம்! இதுதான் திமுக! லிஸ்ட் போட்டு காட்டும் அருள்ரத்தினம்...

கலைஞர் கருணாநிதியின் வாரிசுகள் மாற்று சமுதாயங்களில் திருமணம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம அக்கட்சியின் தலைவர் பதவி கிடைக்கவில்லை. மாறாக, தனது சொந்த இசை வேளாளர் சமுதாயத்தில் திருமணம் செய்த மு.க. ஸ்டாலினுக்கு தான் அந்த பதவி அளிக்கப்படது.

pasumai Arul rathinam list and proof for DMK
Author
Chennai, First Published Oct 10, 2019, 4:56 PM IST

"ஒரு கண்ணுக்கு வெண்ணெய், மறு கண்ணுக்கு சுண்ணாம்பா" என்று கேட்பார்கள். ஆனால், திமுக என்கிற கட்சிக்கு இசை வேளாளர் சாதியால் கிடைத்த பயன் என்று குறிப்பிடும்படி எதுவுமே இல்லாத நிலையிலும், அந்த சாதிக்கு எல்லாவற்றையும் வாரிவழங்கி வருகிறது அக்கட்சி ஆதே நேரத்தில், திமுக கட்சியின் வெற்றிக்கு வேறாகவும் விழுதாகவும் இருந்த வன்னியர்களுக்கு துரோகத்தை மட்டுமே அளித்து வருவதுதான் திமுகவின் வரலாறு ஆகும் என பசுமை தாயகம் அருள்ரத்தினம் ஆதாரத்தோடு பல தகவல்களை கூறியுள்ளார்.

யோதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்; 1. "இசை வேளாளர் சமூகத்திற்கு MBC இடஒதுக்கீடு" தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு முறையில், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு (BC) பட்டியலில் உள்ள சில சமூகங்கள் பெரும்பாலான இடங்களை எடுத்துக்கொள்கின்றன. எனவே, BC பட்டியலில் வாய்ப்பை பெறமுடியாமல் இருக்கும் - மிகவும் பின் தள்ளப்பட்ட சமூகங்களை தனியாக பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் 1969 சட்டநாதன் குழு, 1982 அம்பாசங்கர் குழு ஆகியவை பரிந்துரை அளித்தன.

'BC பட்டியலில் அப்போது இருந்த 222 சாதிகளில், 'இசை வேளாளர்' உள்ளிட்ட வெறும் 34 சாதிகள் மிக அதிகமான இடங்களை அபகரிக்கிறார்கள். எனவே, போதுமான வாய்ப்பு கிடைக்காத சாதிகளுக்கு தனியே MBC இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்' என்றது அம்பாசங்கர் குழு. (இசை வேளாளர் சாதியினர் தமது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட இருமடங்கு அதிக இடங்களை BC இடஒதுக்கீட்டில் எடுத்துக்கொள்வதாக குறிப்பிட்டது அப்பாசங்கர் குழு).

இந்த சூழலில், அனைத்து சாதிகளுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார இடஒதுக்கீடு வேண்டும் எனக்கோரி தியாகப் போராட்டத்தை நடத்தினார் மருத்துவர் இராமதாசு அய்யா. வன்னியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் 21 பேர் உயிர்த்தியாகம் செய்தனர். BC பட்டியலில் வாய்ப்பு கிடைக்காத சாதிகளில் மிகப்பெரிய சமூகம் வன்னியர்கள் என்பதால் அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் வன்னியர் சங்கத்தின் கோரிக்கை.

போராட்டம் நடத்திய வன்னியர்களையும் சேர்த்து 108 சாதிகளுக்கு MBC இடஒதுக்கீடு அளிப்பதாகக் கூறிய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, அதற்கான பட்டியலை 1989-ல் உருவாக்கும் போது அதில் தனது இசை வேளாளர் சமூகத்தையும் சேர்த்துக்கொண்டார்.

(அதாவது, ஏற்கனவே BC பட்டியலில் அளவுக்கு அதிகமாக பயனடைந்த சாதி என்று அம்பாசங்கரால் குறிப்பிடப்பட்ட சாதியை, அதைவிட அதிக சலுகைகள் அளிக்கும் விதமாக MBC பட்டியலில் சேர்த்தார் கலைஞர் கருணாநிதி).

2. "இசை வேளாளர் சங்கத்திற்கு பலகோடி மதிப்புள்ள அரசு இடம்!"

சென்னை அடையாறு, கிரீன்வேஸ் சாலை பகுதி சென்னை மாநகரின் மிக அதிக விலை மதிப்புள்ள பகுதி ஆகும். 'முத்தமிழ்ப் பேரவை' எனும் பெயரில் செயல்பட்ட இசைவேளாளர் சங்கத்திற்கு அங்கே பலகோடி மதிப்புள்ள 6 கிரவுண்ட் அரசு நிலத்தை 2009 ஆம் ஆண்டில் வழங்கினார் கலைஞர் கருணாநிதி. இந்த இடத்திற்கு அந்த சங்கம் ஆண்டு வாடகையாக வெறும் 1000 ரூபாய் வழங்கினால் போதும் என உத்தரவிட்டார் கலைஞர். 5 கோடி மதிப்பில் அங்கு அவர்கள் கட்டிய கட்டடத்தை 2011 ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி அவர்களே திறந்தும் வைத்தார்.

இந்த சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இசை வேளாளர்கள் தான். அங்கு கட்டப்பட்டுள்ள திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள படங்கள் அனைத்திலும் இருப்பவர்கள் இசை வேளாளர்களே!

3. "இசை வேளாளர் சமூகத்தின் பெயரில் திருமண நிதி"

1989-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு 8-ம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களின் திருமண நிதி வழங்க முடிவு செய்தது. அதற்கு இசை வேளாளர் சமூகத்தவரான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் என்று பெயரிடப்பட்டது.

4. "இசை வேளாளர் சமூகத்தின் பெயரில் மகப்பேறு நிதியுதவி"

1989-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறுகாலத்தின்போது நிதியுதவி வழங்க முடிவு செய்தது. அதற்கு இசை வேளாளர் சமூகத்தவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டம் என்று பெயரிடப்பட்டது. (டாக்டர் முத்துலட்சுமியின் கணவர் தெலுங்கு ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர். அதனால் தான் ரெட்டி என அழைப்படுகிறார்)

5. "இசை வேளாளர் சமூகத்திற்கு பேருந்துகளில் சலுகை"

பொதுவாக பேருந்துகளில் காய்கறி, விவசாயப் பொருட்களை ஏற்ற விடமாட்டார்கள், அல்லது அதற்கு அதிக கட்டணம் வசூலிப்பார்கள். ஆனால், பேருந்துகளின் மூன்று இருக்கைகளை பிடிக்கும் அளவுக்கு பெரிய மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கருவிகளை ஏற்றினால் அதற்கு கட்டணம் கிடையாது. இப்படி ஒரு சலுகையை வழங்கியவர் கலைஞர் கருணாநிதி தான்.

6. "இசை வேளாளர் சமூகத்திற்கே கேபினட் அமைச்சர் பதவிகள்!"

மத்திய அமைச்சரவையில் திமுக பெற்ற கேபினட் அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கை 11 ஆகும். அவற்றில் பாதியளவுக்கும் மேலாக 6 கேபினட் அமைச்சர் பதவிகள் இசை வேளாளர் சாதியினருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது.

7. "இசை வேளாளர் சமூகத்துக்கே தலைவர் பதவி!"

கலைஞர் கருணாநிதியின் வாரிசுகள் மாற்று சமுதாயங்களில் திருமணம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம அக்கட்சியின் தலைவர் பதவி கிடைக்கவில்லை. மாறாக, தனது சொந்த இசை வேளாளர் சமுதாயத்தில் திருமணம் செய்த மு.க. ஸ்டாலினுக்கு தான் அந்த பதவி அளிக்கப்படது.-- இவ்வாறாக, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் - இசை வேளாளர் சாதிக்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள திமுக தயங்கியது இல்லை என்பதையே மேற்கண்ட சில எடுத்துக்காட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆனால், அந்த அக்கறை தமிழ்நாட்டின் தனிப்பெரும் சமூகமான வன்னியர்கள் மீது திமுகவுக்கு ஏன் இல்லை? இத்தனைக்கும் திமுக என்கிற கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலில் பெரு வெற்றிபெறவும், ஆட்சி அமைக்கவும் ஆதரவாக இருந்த சமூகம் வன்னியர் சமூகம் தான். திமுக என்கிற கட்சியை வளர்த்ததும், இன்றைக்கும் தாங்கிப்பிடிப்பதும் வன்னியர்கள் தான்.

ஆனாலும், வன்னியர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கவும், நீதியான உரிமைகளை அங்கீகரிக்கவும் திமுக ஒருபோதும் முன்வராததது ஏன்?

குறிப்பு:

1. "அண்ணாவும் கருணாநிதியும் ஒரே சாதி!"

அறிஞர் அண்ணா அவர்களின் தந்தை செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். அவரது தாயார் பங்காரம்மா, 'கலவந்துலு' எனும் தெலுங்கு மொழிபேசும் இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். அவர் ஒரு கோவில் பணியாளர் என்று அவரது வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. அறிஞர் அண்ணா தந்தையின் வீட்டில் வளரவில்லை. அவரது தாயாருடைய சகோதரி (சின்னம்மா) வீட்டில் வளர்ந்தவர் ஆகும்.

அந்த வகையில் அறிஞர் அண்ணா இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர் என Unfinished Gestures: Devadasis, Memory, and Modernity in South India, 2011, by Davesh Soneji எனும் நூல் குறிப்பிடுகிறது.

அண்ணாவுக்கு அடுத்த நிலையில் தலைவர்கள் இருந்தாலும் - இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், அறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் வாரிசாக உருவானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்!

2. இசைவேளாளர் என்கிற சமூகத்தை குறைத்து மதிப்பிடுவது நமது நோக்கம் அல்ல. திமுகவின் வன்னியர் விரோதத்தை சுட்டிக்காட்டவே இசை வேளாளரை எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறோம் எனக்கு கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios