Asianet News TamilAsianet News Tamil

ரயில் பயணம் செய்யும் பயணிகள் உஷார்.! ரூ80க்கு விற்கப்பட்ட 50கிராம் பொங்கல்.. பொங்கியெழுந்த ரயில்பயணி..!

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கான செய்தி இது. ரயில் பயணம் செய்யும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.ஒன்று திருட்டு இன்னொன்று உணவு. இந்த இரண்டுமே ரெம்ப மோசமாகவே இருக்கும். ரயில்வேதுறை பயணிகளுக்கு உணவு விற்பனை செய்வதில் என்னதான் அதிக கவனம் எடுத்து வந்தாலும் இதுபோன்ற கொள்ளைகள் நடக்கத்தான் செய்கிறது.
 
Passengers traveling by train are alert! 50 gram Pongal sold for Rs.80
Author
Chennai, First Published Oct 5, 2020, 8:52 AM IST

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கான செய்தி இது. ரயில் பயணம் செய்யும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.ஒன்று திருட்டு இன்னொன்று உணவு. இந்த இரண்டுமே ரெம்ப மோசமாகவே இருக்கும். ரயில்வேதுறை பயணிகளுக்கு உணவு விற்பனை செய்வதில் என்னதான் அதிக கவனம் எடுத்து வந்தாலும் இதுபோன்ற கொள்ளைகள் நடக்கத்தான் செய்கிறது.

Passengers traveling by train are alert! 50 gram Pongal sold for Rs.80

50 கிராம் பொங்கல் 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகியுள்ளது.திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்த பல்லவன் ரயிலில் எட்வர்ட் ராஜ் என்பவர் பயணித்துள்ளார். அப்போது ரயிலில் சாப்பிட பொங்கல் ஒன்றை அவர் வாங்கியதாக தெரிகிறது. வெறும் 50-60 கிராம் மட்டுமே இருந்த அந்த பொங்கலில் 6 மாதங்கள் வரை சாப்பிட முடியும் என்று எக்ஸ்பைரி டேட் போடப்பட்டிருந்துள்ளது. இதை பார்த்து கடுப்பான பயணி எட்வர்ட் ராஜ் , உணவு தயாரித்து விற்பனை செய்யும் கான்ட்ராக்டர்களை வெளுத்து வாங்கியுள்ளார்.

Passengers traveling by train are alert! 50 gram Pongal sold for Rs.80

அத்துடன் இதுகுறித்து ரயில்வேதுறையிடமும் புகார் தெரிவித்துள்ளார். அதில் டிடிஆர் உள்ளிட்ட பலரிடம் புகார் தெரிவித்தும் எங்களால் நவடிக்கை எடுக்க இயலாது என்று அவர்கள் கூறினர். அதனால் இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.பொதுவாக ரயிலில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருக்கும் என்ற பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. அந்த வகையில் உணவின் அளவும் குறைவாகவும், விலை அதிகமாகவும் உள்ளது என்ற பயணியின் புகார் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios