நடிகை நயன்தாரா மீதும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் கூட, நாலை அரசியலில் குதிக்கலாம்.  பிரசாரம் செய்யலாம்: கங்கைஅமரன். (அது கிடக்கட்டும்ணே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்ல நிப்பாட்டுறதுக்கு உங்களை பி.ஜே.பி. தேடுனப்ப, கோயமுத்தூர்ல ஒரு ஹாஸ்பிடல்ல வாலண்டியரா போயி பெட்ல படுத்தீங்களே, அந்த பில்லு எவ்வளவுன்னு சொல்லவேயில்லையே!) 

* நடிகை நயன்தாரா மீதும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் கூட, நாலை அரசியலில் குதிக்கலாம். பிரசாரம் செய்யலாம்: கங்கைஅமரன். 
(அது கிடக்கட்டும்ணே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்ல நிப்பாட்டுறதுக்கு உங்களை பி.ஜே.பி. தேடுனப்ப, கோயமுத்தூர்ல ஒரு ஹாஸ்பிடல்ல வாலண்டியரா போயி பெட்ல படுத்தீங்களே, அந்த பில்லு எவ்வளவுன்னு சொல்லவேயில்லையே!)

* கமல் ஒரு அற்புதமான கலைஞர். அவரது கலைப்படைப்புகளை தொடர்ந்து பார்க்க முடியாமல் போனது மிகப்பெரிய இழப்பு. பல அரிய படைப்புகளை அவர் தரவேண்டும்! என்பதே என் போன்ற ரசிகர்களின் ஆசை: பீட்டர் அல்போன்ஸ். (டியர் பீட்டரு....இதுக்கு நீங்க டைரக்ட்டா ‘கமல் சினிமாவுல மட்டும் நடிங்க. அதுலதான் உங்க வேஷத்தை பார்க்க அவ்வளவு அம்சமா இருக்குது.’ன்னு ஓப்பனா சொல்லியிருக்கலாம். அதென்ன சின்னப்புள்ளத்தனமா சுத்தி வளைச்சு பேசுறது?)

* எங்களுக்கு ஓட்டு போட்டு அவர் பதவிக்கு வந்து, அவரது பணி சரியில்லை என்று புகார் கூறப்பட்டால் அவரை விசாரிப்போம். உடனே அவரது ராஜினாமா கடிதத்தை எங்கள் அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு அனுப்பி வைப்போம்: கமல்ஹாசன்.(இதான், இதேதான் கமல், மருதநாயகம் படம் ஆரம்பிக்கிறப்பவும் இப்படித்தான் நிறைய பேசுனீங்க. ராணியை கூட்டியாந்து விழாவெல்லாம் நடத்துனீங்க, அட டிரெய்லர் கூட உருவாச்சு. ஆனால்?....எதுவுமே நடக்கலையே கோப்ப்ப்ப்ப்பால்!

* 2011 தேர்தலில் நடிகர் வடிவேலு, தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். கூட்டம் கூடியது, ஆனால் ஓட்டுகள் விழவில்லை. எனவே சினிமா நட்சத்திரங்களால் வாக்கு வங்கியெல்லாம் உருவாகாது, அந்த அலையெல்லாம் ஓய்ந்துவிட்டது: சரவணன் -தி.மு.க. மருத்துவரணி மாநில நிர்வாகி (ஒரு சம்பவம் நடந்தால் அதனால் ஒரு விளைவு ஏற்படணும், சரியா. வடிவேலு பேசி, உங்க கட்சிக்கு ஓட்டுக்கள் விழலைதான். ஆனால் வடிவேலு ஒரேடியா விழுந்துட்டாரேய்யா. எம்மாம் பெரிய கலைஞனை ஒரே தேர்தலோட முடிச்சுக்கட்டி ஒரு ஓரமா ஒக்கார வெச்ச கும்பல்தானேய்யா நீங்க.)

* பொய் வாக்குறுதி அளிப்பது காங்கிரஸுக்கு கை வந்த கலை. எனவே அதை உண்மை என்று நம்பிவிடாமல் மக்கள் கவனமுடன் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி. 
(ஆமா தல, அதனாலதான் உங்கள மாதிரி உண்மை பேசுற கட்சியை போன தபா ஆதரிச்சோம். சொன்ன மாதிரியே பதினஞ்சு லட்சத்த நீங்க பாட்டுக்கு அக்கவுண்டுல போட்டு வுட்டுட்டீங்க. அதை செலவழிக்க முடியாம நாங்க படுற பாடு....)