Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தை பிரித்து ’கொங்கு நாடு’... ஈரோட்டை தலைநகராக்கி தனி மாநிலம் உருவாக்கக் கோரிக்கை..!

ஈரோட்டை தலைநகராகக் கொண்ட 'கொங்கு நாடு' என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என அமமுக நிர்வாகி பொங்கலூர் மணிகண்டன் மத்திய- மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Partition of Tamil Nadu to form a separate state with 12 districts
Author
Tamil Nadu, First Published Aug 19, 2019, 1:19 PM IST

ஈரோட்டை தலைநகராகக் கொண்ட 'கொங்கு நாடு' என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என அமமுக நிர்வாகி பொங்கலூர் மணிகண்டன் மத்திய- மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Partition of Tamil Nadu to form a separate state with 12 districts

அவர் விடுத்துள்ள கோரிக்கையில், ’’நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், திருச்சி, சேலம், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி கிருஷ்ணகிரி ஆகிய 12 மாவட்டங்களை இணைத்து "கொங்கு நாடு" என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும். 

மறைந்த முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த மண்ணும் கொங்கு நாடே. கொங்கு நாட்டின் ஒரு பகுதியான மலபார் ஜில்லா, பாலக்காடு கேரளாவுடன் மொழிவாரியாக மாநிலப் பிரிவினை நடைபெற்ற போது இணைக்கப்பட்டு விட்டது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட மக்கள் நிறைந்ததே கொங்குநாடு. 

1994 ல் புரட்சித் தலைவி அம்மா ஆட்சியின் போது கரூரில் நடைபெற்ற கொங்கு மக்கள் 10 லட்சம் பேர் திரண்ட மாநாட்டில் முதல்வர்களின் முதலாளி கோவை செழியன் பேசும் போதும் போது, "கொங்கு நாடு தனி மாநிலம் ஆக்கப்பட வேண்டும்" என்பதை வலியுறுத்தி அதற்கான காரணங்களையும் விளக்கிப் பேசினார்.

அவரது எண்ணம் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. எம்.ஜி.ஆர் நேசித்த மண். அவரது பூர்வீகம் கொங்கு நாடு மட்டுமல்ல, மன்னாடியார் எனும் பட்டப் பெயர் கொண்ட கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான் அவர் என்பதை கோவை செழியன் அவர்கள் வெளிப்படையாக எம்.ஜி.ஆரை நிறுவனராகக் கொண்டு வெளிவந்த "அண்ணா" என்ற பத்திரிக்கையில் எழுதியும், பேசியும் வந்தார். Partition of Tamil Nadu to form a separate state with 12 districts

எம்.ஜி.ஆரை மலையாளி என்று மறைந்த திமுக தலைவர் கலைஞரும், திமுகவினரும் பிரச்சாரம் செய்து வந்த நிலையில் கோவை செழியன் எழுதிய கட்டுரையால் அகமகிழ்ந்தார் எம்.ஜி.ஆர். "கொங்கு நாடு" தனி மாநிலம் ஆக்கப்பட அனைத்து தகுதிகளும், வளங்களும், வாய்ப்புகளும் நிறைந்தே இருக்கிறது. இந்தியாவில் பல பெரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு நகரத்தை தலைநகராகக் கொண்டு தனி மாநிலம் உருவாக்கி அதற்கு கொங்கு நாடு என்று பெயரிட வேண்டும்.
கொங்கு நாடு என்பது மண்ணுக்குரிய பெயர். 

சாதி, மதம், இனம், மொழி, நிறம் என எந்தப் பாகுபாடுமின்றி அனைவரையும் அரவணைத்து மரியாதையுடன் அன்புடன், சண்டை சச்சரவுகளின்றி அமைதிப்பூங்காவாக வாழும் மக்களை கொண்டது. அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் தொழில்வளம் நிறைந்து  உலகிற்கே உணவளிக்க உழவுத் தொழில் காக்க உழைக்கும் மக்களை கொண்ட மண்.

தேனினும் இனிய அழகிய கொங்கு தமிழில் பேசி தனித்துவம் கொண்ட தமிழ் மக்கள் நிறைந்ததே கொங்கு மண். இந்த மண்ணில் உழைப்பு, உழைப்பும் உழைப்பு இவற்றை மட்டுமே மூலதனமாகக் கொண்ட கொங்கு நாட்டு மக்களின் நீண்ட நாள் கனவான தனி மாநிலமாவதன் மூலம் பெரும் வளர்ச்சியை கொங்கு நாடு அடையும். அதன் மூலம் தேசம் வலிமை பெறும். நிர்வாக ரீதியாகவும் மக்களின் நலன் கருதியும் மாநில பிரிவினை அவசியமாகும். சென்னை தமிழகத்தின் தலைநகர் என்பதற்கான அனைத்து தகுதியையும் இழந்து வருகிறது. Partition of Tamil Nadu to form a separate state with 12 districts

மக்கள் வாழத் தகாத ஊராக சென்னை மாறி வருகிறது. நிலப்பரப்பு, மக்கள் தொகை, நிர்வாக அமைப்புகள் என தமிழகம் பெரிய சுமையில் சிக்கித் தவிக்கிறது. மக்களின் நலன் கருதி மாநிலம் பிரிப்பு, மாவட்டங்கள் பிரிப்பு என்பது குற்றமோ, தவறோ இல்லை  என்பதால் தமிழ்நாடு மாநிலப் பிரிவினையும், மாவட்டங்கள் பிரிவினையும் மிகவும் அவசியமாகும். எனவே ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட தனி மாநிலக் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்று செயல்படுத்த வேண்டும். 

தனி மாநிலம் கேட்பதால் மற்ற மாவட்டத்து மக்கள் எங்கள் எதிரியல்ல. தமிழ் தான் உயிர் மொழி. தாய் மொழி. தமிழர்கள் எல்லோரும் உற்ற சகோதர உறவுகளே. இந்தப் பாசம் எப்போதும் இருக்கும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், மக்கள் என அனைவரும் ஆதரவு தர வேண்டும்’’ என பொங்கலூர் மணிகண்டன் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios