வேட்பாளர்களை அறிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி...!
மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிட உள்ளனர்.
மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிட உள்ளனர். சிதம்பரம் தொகுதியில் தனிச் சின்னத்திலும், விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் பெரும்பாடுபட்டு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் தனித்தொகுதியான சிதம்பரம், மற்றும் விழுப்புரம் தொகுதியை மு.க.ஸ்டாலின் ஒதுக்கினார். ஆனால் இவர்கள் களமிறங்கும் இரண்டு தொகுதியிலும் உதய சூரியன் சின்னத்திலே நிற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் தனி சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் பொதுச்செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தனி சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டோம். ஆனால் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து கால தாமதம் காட்டி வருகிறது. மோதிரம் சின்னம் கேட்டோம் இல்லை என்றனர். பின்னர் வைரம், பலாப்பழம் சின்னம் கோரியும் அது ஒதுக்கப்படவில்லை என திருமாவளவன் கூறினார்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.