அதிமுக-திமுக ரூ.500...! அமமுக ரூ.200..! வேகமெடுக்கும் பணப்பட்டுவாடா..!
நாளை மறுநாள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா ஜரூராக நடைபெற்று வருகிறது.
நாளை மறுநாள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா ஜரூராக நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதன் பிறகே இறுதி கட்ட களப்பணி என்று சொல்லப்படக்கூடிய வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுக்கும் நடவடிக்கைகளில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டுவர். வழக்கமாக ஆளும்கட்சியாக இருப்பவர்களால் மட்டுமே எந்த பிரச்சினையும் இல்லாமல் பணப்பட்டுவாடா செய்ய முடியும். ஆனால் இதனை எல்லாம் முறியடித்து எதிர்க்கட்சியும் இந்த முறை பணப்பட்டுவாடாவிற்கு தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதன் முன்னோட்டமாக கடந்த இரண்டு நாட்களாகவே எதிர்க்கட்சி தரப்பும் ஆங்காங்கே பணப் பட்டுவாடா செய்து வரும் தகவல்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா நடைபெற்று வருகிறது. ஒரு தொகுதியில் உள்ள 50 சதவீத வாக்காளர்கள் என்கிற கணக்கில் சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் மற்றும் சேரிப் பகுதிகளில் மட்டும் தற்போது எதிர்க்கட்சி தரப்பு பல விநியோகத்திற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதேபோல் ஆளுங்கட்சி தரப்பும் என்று தேர்தல் பிரச்சார முடிந்தவுடன் தொகுதியில் உள்ள 60 சதவீதம் பேருக்கு என்கிற கணக்கில் தலா 500 ரூபாய் என்கிற விதத்தில் பணப்பட்டுவாடா விழா ஏற்பாடுகளை பக்காவாக செய்து முடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் வீடு தேடிச் சென்று 500 ரூபாயைக் கொடுக்க வேண்டியது எப்படி என்கிற திட்டமும் அந்தந்த தொகுதி பொறுப்பாளர்கள் இடம் கச்சிதமாக போட்டுக் கொடுக்கப் பட்டுள்ளது.
இதேபோல் தினகரனின் அமமுக கட்சியும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணியை ஜரூராக தொடங்கி நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் போட்டியிடும் தினகரன் கட்சியின் வேட்பாளர் இசக்கி சுப்பையா தரப்பு ஓட்டுக்கு தலா 200 ரூபாய் என நேற்று இரவு முதலே விநியோகத்தை ஆரம்பித்துவிட்டனர். சைதாப்பேட்டை பகுதியில் பணம் விநியோகித்துக் கொண்டிருந்த இவர்களை அதிமுகவினர் கையும் களவுமாக பிடித்து ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வாக்கிற்கு 200 ரூபாய் என்று திட்டமிடப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் முக்கிய இரண்டு கட்சிகள் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் என்ற நிர்ணயித்துள்ள நிலையில் தினகரன் 200 ரூபாய் மட்டுமே என நிர்ணயித்துள்ளது மக்களை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.