அர்ஜென்டினா பாராளுமன்ற உறுப்பினர் ஜுவான் எமிலியோ அமேரி  நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது தனது காதலியின் மார்பகத்தை முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதை அடுத்து, பாராளுமன்றத்தின் கீழ் சபையில் இருந்து ராஜினாமா செய்யப்பட்டுள்ளார். அவர் சால்டாவைச் சேர்ந்த பிரதிநிதி மற்றும் அர்ஜென்டினாவில் உள்ள பெரோனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவருக்கு 47வயதாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது அர்ஜென்டினாவில் பாராளுமன்ற கூட்டங்கள் ஜூம்ஆப் வழியாக நடத்தப்பட்டுள்ளன. சில சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்வுகளில் நேரடியாக கலந்து கொண்டனர். பெரும்பாலானோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் விவாதங்களில் பங்கேற்றனர்.ஓய்வூதிய நிதி முதலீடுகளைப் பற்றி விவாதிக்க அர்ஜென்டினா பாராளுமன்றக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. 

ஆன்லைனில் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது ஜுவான் எமிலியோ அமேரி காதலியின் பிளாக் டாப்பை கீழே இழுத்து வெற்று மார்பகங்களை முத்தமிட ஆரம்பித்தார். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்தது மற்றும் அர்ஜென்டினா அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து சர்ச்சைக்குரிய வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.அமேரி அமர்வு முடிந்துவிட்டதாகவும், கேமரா அணைக்கப்பட்டதாகவும் கருதி இவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறினார். அவர் சமீபத்தில் ஒரு மார்பக பெருக்குதல் அறுவை சிகிச்சை செய்ததால் தனது காதலியின் மார்பகங்களை பார்க்க விரும்பியதாகவும் அவள் என் அருகில் இருந்தாள். நான் அவளது மார்பில் முத்தமிட்டேன். அவ்வளவுதான் என விளக்கமளித்துள்ளார்.

அவர் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் கூறினாலும், பின்னர் அமேரி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பாராளுமன்றமும் ஏற்றுக்கொண்டது.