Asianet News Tamil

ஒட்டுண்ணிகள்.. நச்சுக்களைகள்.. ஈபிஎஸ் முன்னிலையில் சசிகலா குடும்பத்தினர் மீது சேலம் எம்எல்ஏக்கள் அட்டாக்!

ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக அதிமுக தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சேலத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 

Parasites .. Toxins .. Salem MLAs attack Sasikala family in presence of EPS!
Author
salem, First Published Jun 17, 2021, 9:14 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக சார்பில்  சேலம் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் எம்.பி. சந்திரசேகர், எம்எல்ஏக்கள் மணி, நல்லதம்பி, சித்ரா, ராஜமுத்து, ஜெய்சங்கரன், சுந்தர்ராஜன், பாலசுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.பல கட்சிக் கூட்டணி, பல ஆயிரம் கோடி செலவு, பகட்டான வாக்குறுதி உள்ளிட்டவற்றுடன் திமுக மற்றும் எதிர் அணியினர் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகக்குறைந்த வாக்கு சதவீதத்தில்தான் வெற்றி பெற்றிருக்கின்றனர். பிரதான எதிர்க்கட்சியாக அதிமுகவின் 66 எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் உரக்கக் குரல் எழுப்பி, மக்கள் பணியாற்றத் துடித்துக் கொண்டுள்ளனர்.
2.சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தான் அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருப்பதாக ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக பகிரங்கமாக செய்தி வெளியிட்ட சசிகலா, தேர்தல் முடிவுக்குப் பின்னர் அரசியலில் முக்கியத்துவத்தை தேடிக்கொள்ள, அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக, ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதாக, விநோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக்கூட அவர் இல்லை. தொலைபேசியில் சசிகலா பேசும்போது, சாதிய உணர்வுகளைத் தூண்டும் விதமாகப் பேசுவது, ஒருதாய் வயிற்றுப் பிள்ளையாக வாழும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதை அதிமுக சேலம் புறநகர் மாவட்டம் சார்பாகக் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.
3. ஜெயலலிதா மற்றும் அதிமுக செயல் வீரர்களின் உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகளாகவும், தங்களை வளப்படுத்திக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர், மீண்டும் அதிமுகவை அபகரித்துவிட வஞ்சக வலையை விரித்துக் கொண்டுள்ளனர். ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக, அதிமுக தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது. சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை, அதிமுகவில் இருந்து உடனடியாக நீக்கியதையும், அதிமுக தலைமை அலுவலகக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வரவேற்கிறோம்.
4. தேர்தல் வெற்றிக்காகப் பாடுபட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணிக் கட்சியினர் ஆகியோருக்கு நன்றி. அதிமுக கூட்டணிக்கு 75 எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கும் நன்றி. சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளில், 10 தொகுதிகளில் அதிமுகவை வெற்றிபெறச் செய்த அதிமுக கூட்டணிக் கட்சியினர், வாக்காளர்கள், சேலம் வடக்கு தொகுதியில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி.


இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியை அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகவும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தையும் மற்றும் பிற நிர்வாகிகளையும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு நன்றி உள்பட பல தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios