Asianet News TamilAsianet News Tamil

இனி பப்பு வேகாது... ரிசல்டிற்கு பின் கூடாரத்தை காலி செய்ய முடிவெடுத்த தேமுதிக நிர்வாகிகள்..!

இடைத்தேர்தலில் தலைமை எடுத்த முடிவு, எதிர்கால அரசியல் கருத்தைக் கொண்டு வாக்கு எண்ணிக்கை முடிவு வருவதற்குள் இந்த கூட்டத்தை நடத்தி ஒரு முடிவு பண்ணி இருக்கிறார்கள். 

Pappu is not fast anymore ... dmdk executives who decided to vacate the tent after the result ..
Author
Tamil Nadu, First Published Apr 20, 2021, 12:24 PM IST

தேமுதிக பொருளாளர் பிரேமலதா மீதான அதிருப்தி தேர்தல் முடிவுக்கு பிறகு பெரிதாக வெடிக்கும் எனப்பேசிக் கொள்கிறார்கள்.  சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி முடிவை சரியாக கையாளாததால் தேமுதிக தலைமை மீதும், பிரேமலதா மீதும் கட்சிக்காரர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேமுதிக கூடாரம் காலியாகப் போவது உறுதி என்கிறார்கள். அதில் வேலூர் மாவட்டம் தான் முதலில் இருக்கிறது. இதற்காக தேர்தல் முடிந்த கையோடு விழுப்புரத்தில் ஆலோசனைக் கூட்டத்தை அவசரமாக நடத்தி முடித்திருக்கிறார். அக்கட்சியின் மாவட்ட செயலாளர்.Pappu is not fast anymore ... dmdk executives who decided to vacate the tent after the result ..

இடைத்தேர்தலில் தலைமை எடுத்த முடிவு, எதிர்கால அரசியல் கருத்தைக் கொண்டு வாக்கு எண்ணிக்கை முடிவு வருவதற்குள் இந்த கூட்டத்தை நடத்தி ஒரு முடிவு பண்ணி இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர், ‘தேர்தலுக்கு முன்பாக ஜனவரிக்குள் கூட்டணியில் நல்ல முடிவு வரும் என்று பிரேமலதா சொன்னார். அதை நம்பி இருந்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. 2011-ல் விஜயகாந்த், அதிமுகவுடன் கூட்டணி என்று உறுதியாக சொன்னார். சொன்னபடி நடந்து கொண்டார். Pappu is not fast anymore ... dmdk executives who decided to vacate the tent after the result ..

அதனால் நமக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. ஆனால், அதற்குப் பிறகு சரியான நிலையை எடுக்கவில்லை. காம்ரேட்ஸ் சரியான கூட்டணி அமைத்து, கட்சிக்கு தலா 2எம்பி, எம்எல்ஏக்களாக இருக்கிறார்கள். ஆனால் நம்மால் முடியவில்லை. எல்லாம் சறுக்கலில் முடிந்துவிட்டது. மூன்றாவது அணி, எப்போதும் முதல் அணியாக வர முடியாது. என்றைக்கும் தமிழகத்தில் 2 அணிதான் என்பதை இந்த தேர்தல்  நிரூபித்துள்ளது. இது நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.Pappu is not fast anymore ... dmdk executives who decided to vacate the tent after the result ..

இனிமேல் தேமுதிகவின் பப்பு வேகாது. எனவே, மாற்றுக் கட்சிக்கு செல்ல ரெடியாகி விடலாம். எலக்ஷனில் கூட்டணி கட்சியில் 50 கோடி வாங்கிக் கொண்டு தலைமை செலவுக்கு, வெறும் 3 லட்சம் கொடுத்தது. அதை திருப்பி கொடுத்து விட்டேன்’’ எனப்புலம்பித் தீர்த்து விட்டதாக கூறுகிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios