* ஆதிவாசி  சமூகத்தினருக்கு வீடு கட்டி தருவதாக அறிவித்துவிட்டு பிறகு ஏமாற்றியதாக நடிகை மஞ்சுவாரியருக்கு எதிராக போராட கிளம்பினர் கேரள பழங்குடி மக்கள்: செய்தி. (நல்லா உத்து கவனிங்க பாஸ் அந்த பழங்குடி மக்கள்ள நல்ல கழுக் மொழுக்குன்னு ஒரு ஆம்பளை இருக்காரான்னு, நம்ம திலீப் சேட்டனா இருக்கப்போவுது)

* ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பெயரளவில் சொல்லும் பல விஷயங்களை நீங்கள்  செயலபடுத்துவதேயில்லை. அ.தி.மு.க. அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகத்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன்: துரைமுருகன். (ஆனா ஒண்ணுண்ணே, ஆட்சிக்கு வரமுடியாட்டாலும், மாதிரி சட்டசபை நடத்துறது, மாதிரி மந்திரி சபை அமைக்கிறது, இன்னும் 3 மாசத்துல 4 மாசத்துல ஆட்சி கலையுமுன்னு அறிவிச்சுட்டே இருக்குறது, இப்படி கடைசி பட்ஜெட்டுன்னு கமெண்ட் அடிக்கிறதுன்னு உங்க வண்டியும் ஓடுது பாருங்க.)

* கவர்னர் கிரண்பேடியை கண்டித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரதம். மம்தா ஸ்டைலில் அதிரடி: செய்தி. (அண்ணே ஒரு பதினஞ்சு நாளைக்கு இப்படி உண்ணாவிரதம் இருந்தீங்கன்னு வையுங்க, பிரச்னை தெளிவா தீர்ந்துடும். அப்படியும் தீரலேன்னா எக்ஸ்ட்ரா பதினஞ்சு  நாளுக்கு நீட்டிச்சுப்போம். இப்படியே ஒரு பதினஞ்சு தடவை பண்ணினா ஆட்சியே முடிஞ்சுடும்.)

* தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கூட்டணி  இல்லாமல் தனித்தனியாக நின்றால் நாங்களும் தனித்து நிற்க தயார்: ஓ.பன்னீர்செல்வம் 
(கூட்டணி வைக்க சொல்லி கழுத்தை நெரிக்கிற பி.ஜே.பி.ய கழட்டி விடுறதுக்கு எம்பூட்டு அழகா பிளான் போட்டு டயலாக் விடுறாருப்பே இந்த மனுஷன். பெரியகொளத்து ஆளுன்னா அதுசரியாதான் இருக்குதுப்பே)

* அரசு விற்கும் மணலின் விலை ஆயிரத்து முந்நூறு அல்லது ஆயிரத்து எழுநூறு என்று சொல்கிறார்கள். ஆனால் வெளியில் சில இடங்களில் முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை விற்கப்படுவதாக தகவல்: காங்கிரஸ் ராமசாமி. (ராமசாமியண்ணே லட்சங்கள்ள வூடு கட்டுற மணல் கொள்ளை ஒருபக்கம் இருக்கட்டும். மால்களுக்கு படம் பார்க்கப்போனா பொறிச்ச சோளம்...அதாம்ணே பாப்கார்ம் ஒரு பாக்கெட்டை முந்நூறு ஓவா சொல்றாய்ங்களாம். கடம்பூரார்கிட்ட அதை கேளுங்க.)