panneerselvam tour is start at tomorrow in tamilnadu

முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நாளை முதல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.

அதிமுகவில் பிரிந்து கிடக்கும் இரு அணிகளின் இணைவதற்கான பேச்சுவார்த்தை தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.

இதுகுறித்த பேச்சுவார்த்தை எப்போது முடிவுக்கு வரும் என்று பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதனிடையே தமிழக மக்களை எப்போதும் அரசியல்வாதிகள் பரபரப்புடனே வைத்து வருவதாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், ஓ.எம்.ஆர். சாலை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

இதில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், மைத்ரேயன் எம்.பி., முனுசாமி, பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்திற்கு பின் ஒ.பி.எஸ் கருத்து கணிப்பு கேட்டு தமிழகத்தில் சுற்றுபயனத்தை தொடங்குகிறார்.

இதில், எடப்பாடி அணியும், ஒ.பி.எஸ் அணியும் இணையலாமா வேண்டாமா என்பது குறித்தும், ஜெயலலிதா மரணம் குறித்தும் கருத்து கேட்க உள்ளதாக தெரிகிறது.