தேனி நாடாளுமன்றத் தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரின் தேர்தல் பிரச்சார வியூகத்தை பார்த்து ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் மிரண்டுபோய் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் நிறுத்தப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப் படுவதற்கு முன்னரே அவர் தேர்தல் பணிகளை தேனி தொகுதியில் முடுக்கி விட்டிருந்தார். இந்த நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு தேனி தொகுதியை தெருத்தெருவாக சுற்றிவருகிறது ரவீந்திரநாத் குமாரின் படை. அதிலும் திமுக கூட்டணி பலம் வாய்ந்த இடம் என்று கருதப்படும் இடங்களிலெல்லாம் ரவீந்திரநாத் நாட்கள் தங்கி தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் தேர்தல் பணிகளுக்கு தேவையான பிரச்சார வாகனம் மேடை அமைப்பது நாற்காலிகள் உணவுகள் என அனைத்தையுமே ஓபிஎஸ் தரப்பு திட்டம் போட்டு முதலிலேயே முடக்கி விட்டது.

இதனால் பிரசாரம் மேற்கொள்ளும் ஈவிகேஎஸ் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு பிரச்சாரத்திற்கு தேவையான ஆட்கள் கிடைப்பதற்கு கூட சிரமம் என்கிறார்கள் தேனியில் உள்ளவர்கள். இந்த அளவிற்கு மிகத் தீவிரமாக ரவீந்திரநாத் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கான வியூகத்தை ஓபிஎஸ் கச்சிதமாக அமைத்துக் கொடுத்து தன் பங்கிற்கு அவரும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அதேசமயம் ஈவிகேஎஸ் இளங்கோவன் உணவு தானிய நல்ல அந்நிய நல்ல என்று கூறிய பிரச்சாரம் செய்து ஓய்ந்து போய் விட்டார். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்டாலின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக தேனியில் வைத்து பிரச்சாரம் செய்த போது கூட இளங்கோவன் முகத்தில் சிறிது கூட கலையே இல்லை. இதற்கெல்லாம் காரணம் ஓபிஎஸ் தரப்பின் தீவிரமான பிரச்சாரமும் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையும் தான் என்கிறார்கள்‌.

இது மட்டுமல்லாமல் ஜாதி என்கிற ஒன்று ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அங்கு உதவி செய்யும் சூழல் இல்லை. திமுக கூட்டணியில் உள்ள நிர்வாகிகள் கூட நம்மால் தாங்க ஜெயிக்கனும் என்று பேசி வருவதாக கூறி அதிர வைக்கின்றன காங்கிரஸ்காரர்கள்.