Saravanan MLA Exclusive video

சசிகலாவுக்கு ஆதரவளிக்க அதிமுகவின் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரிக்கு அதிக பணம் கிடைத்தது என்று பன்னீர் அணியில் உள்ள சரவணன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைந்த அன்று இரவோடு இரவாக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட பன்னீர்செல்வம், சசிகலாவுடனான சண்டைக்குப்பின் தனித்தனி அமைத்து சசிகலாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகிறார்.

அவர் அணியில் சசிகலாவின் எதிரிகளாக இருக்கும் அனைவரும் பன்னீருடன் கைகோர்த்து குடைச்சலை கொடுத்து வருகின்றனர். சசி முதல்வராவதை எதிர்த்து தியானம் இருந்த பன்னீருக்கு மதுசூதனன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் ஆகியோர் ஒ.பி.எஸ் உடன் சேர்ந்தனர்.

இதனையடுத்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பிறகு கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டார்கள். அப்போது சில சசிகலா கூடாரத்திலிருந்து டேரா போட்டிருந்த எம்.எல்.ஏ சரவணன் மாறு வேடத்தில் தப்பிவந்த பன்னீர் அணியில் ஐக்கியமானார்.

இந்நிலையில், இன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வெளியான வீடியோ கிளிப்பில், சொந்த ஊரிலிருந்து வந்த எம்.எல்.ஏ.க்களை விமானநிலையத்தில் மடக்கியது சசி அணி விமான நிலையத்தில் பேருந்தில் ஏற்றியபோது எம்.எல்.ஏ.வுக்கு தலா ரூ.2 கோடி என பேரம் பேசியதாக கூறியுள்ளார்.

பின்னர் எம்.எல்.ஏ. விடுதியில் இருந்து ஆளுநரை சந்திக்க சென்றபோது பேரம் ரூ.4 கோடியானது என்றும் கூவத்தூர் சேர்ந்தபோது எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.6 கோடி தர முன்வந்ததாகவும் ஒரே நேரத்தில் பல கோடி திரட்ட முடியாது என்பதால் தங்கமாக கொடுத்ததாக கூறியுள்ளார் சரவணன்.

இதுமட்டுமல்ல கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரட்டை இல்லை சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி இவர்களுக்கு சசிகலாவுக்கு ஆதரவளிக்க அதிக பணம் கிடைத்தது என்று பன்னீர் அணியில் உள்ள சரவணன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.