அதிமுக ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ்சை ஆதரிக்கும் மனநிலையில் உள்ளார்கள் என்று ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்த மா.பா.பாண்டியரஜன் தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதிமுக எக்கு கோட்டை உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் அன்பு அண்ணன் ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். அங்குள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும் ஒரே எண்ணத்தில் தான் உள்ளனர். அனைவரும் பன்னீர் செல்வம் தலைமையில் ஒன்றுகூட வருவார்கள். 

கழகம் உடையும் என்ற எண்ணம் கொண்ட திமுகவுக்கு ஏமாற்றமே கிடைக்கும். அண்ணன் ஓபிஎஸ் அவர்களை தலைமையில் இயக்கம் இயங்கும் . கழகம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் கழகம் பிளவுபட கூடாது என்ற எண்ணமே அனைவரின் எண்ணமாக உள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து எம்.எல்.ஏக்களும் முதல்வர் ஓ.பிஎஸ் அவர்களை நாடிவருவார்கள் என்று உறுதியாக தெரிவிக்கிறேன். இவ்வாறு பாண்டியராஜன் பேசினார்.