Pakoda business load available in SBI
பக்கோடா விற்பது தொடர்பாக பிரதமரின் கருத்தை கிண்டல் செய்யும் வகையில் பக்கோடா வியாபராம் செய்ய இங்கு லோன் கிடைக்கும் என ஸ்டேட் பேங்க் முன்பு போர்டு வைத்து காங்கிரஸ் கட்சியின் கலாட்டா செய்து வருகின்றனர்.
நம் இளைஞர்கள் நாள்தோறும் பக்கோடா விற்று 200 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அதுவும் நல்ல ஒரு வேலை வாய்ப்புதான் என்றும், அவர்களும் தொழிலதிபர்கள்தான் என்றும் பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அது மட்டுமல்லாமல் பக்கோடாவை வைத்து மீம்ஸ் லட்சக்கணக்கில் பறந்தது. சமூக வலைதளங்களில் பக்கோடா பிரச்சனை வைரலானது.
கடந்த வாரம் பெங்களூருவில் மோடி கலந்து கொண்ட பொதுக் கூட்டம் ஒன்றில் இளைஞர்கள் சிலர் பட்டதாரி உடையுடன் பக்கோடா விற்று பரபரப்பை ஏற்படுத்தினர்.

புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் பஜ்ஜி, பக்கோடா போட்டு விற்கும் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியின் பிரதான வீதியான நேரு வீதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் இன்று பக்கோடா தயார் செய்து பிரதமரை கலாய்த்தனர்.
இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு இங்கு பக்கோடா வியாபாரம் பண்ண லோன் கிடைக்கும் என காங்கிரஸ் குறும்பர்கள் சிலர் போர்டு வைத்து மோடியை மேலும் கலாய்த்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
