Asianet News TamilAsianet News Tamil

டெல்லி கலவர பின்னணியில் பாகிஸ்தான்...!! இந்திய பாதுகாப்புத்துறை வெளயிட்ட அதிர்ச்சி தகவல்..!!

இது ஒரு கட்டத்தில் மதக் கலவரமாக மாறியது கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர் .  100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் . கலவரத்தில்  ஜப்ராபாத் , மஜ்பூர், சந்த்பாக், குரேஜி காஸ் மற்றும் பஜன்புரா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  

Pakistan was behind of Delhi riot , Indian deference deportment find out now
Author
Delhi, First Published Mar 18, 2020, 12:42 PM IST

டெல்லி கலவரம் தொடர்பாக போலி  செய்திகளை பரப்பிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமூக வலைதளப் பக்கங்கள் பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டுவந்தது  தெரியவந்துள்ளது .  இந்திய சைபர் கிரைம் ,  மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .  எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவையே உலுக்கிய மோசமான சம்பவங்களில் ஒன்றாக  கருதப்படுகிறது டெல்லி கலவரம் .  நாட்டின் தலைநகரிலேயே நடந்தி இக்கலவரம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

Pakistan was behind of Delhi riot , Indian deference deportment find out now 

அதே நேரத்தில்  இந்த கலவரம் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரப்பப்படுவதாகவும்,  பல்வேறு வதந்திகளும் பொய் செய்திகளும் திட்டமிட்டே சமூகவலைத்தளத்தில் உலாவவிடுவதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டியது . ஆதாவது,   இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் வடகிழக்குப் பகுதியில் கடந்த மாதம் இறுதியில் சிஐஏ ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது .  இது ஒரு கட்டத்தில் மதக் கலவரமாக மாறியது கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர் .  100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் .  கலவரத்தில்  ஜப்ராபாத் , மஜ்பூர், சந்த்பாக், குரேஜி காஸ் மற்றும் பஜன்புரா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  

Pakistan was behind of Delhi riot , Indian deference deportment find out now

இந்நிலையில் இந்த கலவரம் குறித்து சமூக வலைத்தளத்தில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் உலா வந்ததை  பாதுகாப்புத் துறையினர் கண்டறிந்துள்ளனர் .  இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி சமூக வலைத்தள கணக்குகள் பாகிஸ்தானிலிருந்து இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .  கராச்சி ,  இஸ்லாமாபாத் ,  லாகூர் மற்றும் ராவல்பிண்டி உள்ளிட்ட நகரங்களிலிருந்து #ShameonDelhiPolice, #DelhiRiots2020,#DelhiBurning, ஆகிய பெயர்களில் செய்திகள் வெளியானது தெரியவந்துள்ளது .  இதுதவிர பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் அவரகள் டெல்லி கலவரம் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவிட்டது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios