காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவை ஆதரித்து வந்த நிலையில், திமுக மட்டும் அதனை எதிர்த்து இன்று டெல்லியில் போராட்டம் நடத்தியது. திமுக அறிவித்த இந்தப்போராட்டத்தை பாகிஸ்தானை சேர்ந்த ரேடியோ பாகிஸ்தான் செய்தி வெளியிட்டு ஸ்டாலினை ஹீரோவை போல கொண்டாடியது.

 

பாகிஸ்தானில் உள்ள சில ஊடகங்கள், "இந்தியாவில் 2019 ம் ஆண்டு தேர்தலில் 3வது பெரிய கட்சியாக வெற்றி பெற்ற திமுக, மோடி அரசின் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது" என குறிப்பிட்டு செய்தி வெளியிட்டன. 

ஸ்டாலினின் முடிவை தங்களுக்கு பாகிஸ்தான் மாற்றிக் கொண்டதை சற்றும் எதிர்பார்க்காத திமுக தலைமை கலக்கத்திற்கு ஆளானது.  பாகிஸ்தானின் இந்த முடிவு திமுக, பாகிஸ்தானின் ஆதரவு கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் சுதாரித்துக் கொண்ட திமுக காஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் என்கிற நிலைப்பாட்டில் இருந்து விலகி காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மட்டுமே போராட்டம் நடத்துகிறோம் எனக் கூறியது.

 

இந்தப்போராட்டம் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொண்டதால் அறிவிப்புக்காக இன்றைய போராட்டத்தை கடமைக்கே நடத்தியது. வீரியமிழந்த இந்தப்போராட்டத்தில், 14 கட்சிகள் பங்கேற்றதாக வீராப்பு காட்டிக் கொண்டாலும் மு.க.ஸ்டாலின் செல்லாதது அதிருப்தியை ஏற்படுத்தியது. திமுக எம்.பிகள் சிலரே இந்தபோராட்டத்தில் பங்கேற்கவில்லை, குறிப்பாக கனிமொழி, வைகோ, திருமாவளன் ஆகியோர் பங்கேற்கவில்லை. 

திருமாவளவன் வாழ்த்து தெரிவித்ததோடு சென்னையில் தங்கி விட்டார். பின்னர் அவர், ஆளுநர் முன்னாள் இன்று வழங்க இருந்த டாக்டர் பட்டத்தை பெறவே திமுக நடத்திய போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.