எத்தனை எத்தனையோ போராளிகளின் உழைப்பின் பயனாக பெற்ற உரிமையை, அவர்களின் போராட்ட வரலாற்றை மறுத்து பிச்சை என்று சொல்லும் சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள் என இயக்குநர் பா.ரஞ்சித், ஆர்.எஸ்.பாரதிக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

எத்தனை எத்தனையோ போராளிகளின் உழைப்பின் பயனாக பெற்ற உரிமையை, அவர்களின் போராட்ட வரலாற்றை மறுத்து பிச்சை என்று சொல்லும் சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள் என இயக்குநர் பா.ரஞ்சித், ஆர்.எஸ்.பாரதிக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அரிஜன மக்களுக்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்கி அமைர வைத்தது கருணாநிதி போட்ட பிச்சை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசி யது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்காக அவர் வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் அந்த சர்ச்சை அடங்கவில்லை. இதுகுறித்து இப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பா.ரஞ்சித், ‘’பார்ப்பனிய வர்ண அடுக்குகளுக்கு எதிராக அயோத்திதாசர் தொடங்கிய திராவிட, தமிழ் உணர்வின் தொடர்ச்சியில் பெரியாரும் முன்னெடுத்த சாதி எதிர்ப்பு திராவிட கொள்கைகளால் ஆட்சிக்கு வந்த பலர் இன்று பெரியாரையும் மறந்து (மறுத்து) விட்டார்கள் என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்ந்துகின்றன!

Scroll to load tweet…

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவன் தொடங்கி அயோத்தி தாசர், ரெட்டைமலை சீனிவாசன், எல்.சி குருசாமி, எம்.சி.ராஜா, புரட்சியாளர் அம்பேத்கர், சிவராஜ், மீனாம்பாள், சத்தியவாணிமுத்து இன்னும் எத்தனை எத்தனையோ பெயர் தெரியாத போராளிகளின் உழைப்பின் பயனாக பெற்ற உரிமையை, அவர்களின் போராட்ட வரலாற்றை மறுத்து பிச்சை என்று சொல்லும் சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள். 

பெரியார் பார்வையை மறந்துவிட்ட உங்களுக்கு அவரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. முன்னோடிகளை படமாக ஆக்கி அஞ்சலி செலுத்துவதை விட, முதலில் அவர்களை கருத்தில் இருத்த பழகுங்கள்’’ என அவர் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.