சிபிஐ காவலில் இருந்தபோதே மோடி அரசின் பொருளாதார சரிவை செமையாக கலாய்த்த ப. சிதம்பரத்தின் காணெலி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு. கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் இருந்துவருகிறார். இந்த வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும்  வரும் 5ம் தேதி வரை சிபிஐ காவலி வைக்கும்படி நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டார். நீதிமன்ற வளாகத்துக்கு ப. சிதம்பரம் அழைத்து வரப்பட்டபோது அவருடைய குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் சந்தித்து பேச 5 நிமிடங்கள் அனுமதி வழங்கப்பட்டன. 
ஏராளமாக செய்தியாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்தனர். நீதிமன்ற அறையை விட்டு ப. சிதம்பரம் வெளியே வந்தபோது, கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு சற்று சிரித்தபடி ‘5 பர்செண்ட் (5 சதவீதம்) ” ப.சிதம்பரம் நகர்ந்தார்.
 ‘5 பர்சென்ட்’ என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று செய்தியாளர் மீண்டும் எதிர்க்கேள்வி கேட்டார். “5 சதவீதம் என்ன என்பது உங்கள் நினைவில் இல்லையா” என்று சொல்லிவிட்டு புன்னகையோடு கிளம்பிசென்றார்.  இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இந்த நிதியாண்டில் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால், மோடி அரசை பொருளாதார நிபுணர்களும் எதிர்க்கட்சிகளும் வறுத்தெடுத்து வருகின்றன. இந்நிலையில் ஜிடிபி சரிவைதான் 5 சதவீதம் என்று சிதம்பரம் கேலி செய்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக 15 வினாடிகள் ஒளிபரப்பாகும் காணொலி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிபிஐ காவலில் இருந்தபடி மோடி அரசை ப. சிதம்பரம் கேலி செய்த காணொலியைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துவருகிறார்கள்.