Asianet News TamilAsianet News Tamil

ப.சிதம்பரத்தின் ஆல்-இன் ஆல்... வாசன் ஐகேர் நிறுவனர் அருண் தற்கொலை..? காரணம் பினாமி பணமா..?

தமிழகத்தில்  நடந்த  மிக பிரம்மாண்ட அரசியல்வாதியின் நிழலாக இருந்து, அவர்களின் கருப்பு பணத்தை கையாண்டவர்களில் மூன்றாவது நபரா வாசன் ஐகேர் நிறுவனர் மருத்துவர் அருண்குமார் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. 
 

P. Chidambaram's All-in-All Icare founder Arun commits suicide? Is it because of the surrogate money ..?
Author
Tamil Nadu, First Published Nov 16, 2020, 5:30 PM IST

தமிழகத்தில்  நடந்த  மிக பிரம்மாண்ட அரசியல்வாதியின் நிழலாக இருந்து, அவர்களின் கருப்பு பணத்தை கையாண்டவர்களில் மூன்றாவது நபரா வாசன் ஐகேர் நிறுவனர் மருத்துவர் அருண்குமார் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. P. Chidambaram's All-in-All Icare founder Arun commits suicide? Is it because of the surrogate money ..?

இந்தியா முழுவதும் 170 கிளைகளுடன் இயங்கி வரும் வாசன் ஐ கேர் குழுமத்தின் தலைவர் அருண் இன்று மாரடைப்பால் காலமானதாக கூறப்பட்டது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 40 வயதில் வாசன் ஐ கேர் என்ற பெயரில் திருச்சியில் கண் மருத்துவமனையை தொடங்கிய அருண், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் தனது கிளைகளை ஆலமர விழுதாக பரவச்செய்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வலதுகரமாக திகழ்ந்த அருணுக்கு கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாக இருந்த முருகையா என்பவரின் மகன் இந்த அருண். வாசன் குரூப் என்ற பெயரில் திருச்சியில் முருகையா குடும்பத்தினருக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் உள்ளன. திருச்சி கரூர் சாலையில் ஏபிசி ஹாஸ்பிடல் என்ற மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நிறுவிய அருண், கண் மருத்துவத்திற்கென பிரத்யேகமாக வாசன் ஐ கேர் என்ற மருத்துவமனையை 2008-ம் ஆண்டு தொடங்கினார்.P. Chidambaram's All-in-All Icare founder Arun commits suicide? Is it because of the surrogate money ..?

ப.சிதம்பரத்திற்கு ஆல் இன் ஆலாக விளங்கிய அருணின் வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்தது. ஒரு கட்டத்தில் கண் மருத்துவமனையை திறந்து வைக்க பிரதமர் மன்மோகன் சிங்கை அழைத்து வரும் அளவுக்கு அருணின் செல்வாக்கு உயர்ந்தது. இந்தியா முழுவதும் 170 கிளைகளில் வாசன் ஐ கேர் செயல்பட்டு வரும் நிலையில் மாதம் ஒன்றுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரவு செலவு நடந்து வருகிறது.அருண் நிதி நெருக்கடியில் தவித்து வந்ததாகவும் இதன் காரணமாக சில மாதங்கள் அவர் வெளிநாடுகளில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.P. Chidambaram's All-in-All Icare founder Arun commits suicide? Is it because of the surrogate money ..?

ஆனால் அருண் மாரடைப்பால் மரணமடையவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்ஷா வரிசையில் மூன்றாவது நபரா மருத்துவர் அருண்..? என அபலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios