சாதி, மதத்தை எல்லாம் தாண்டி மனிதனை மனிதனாகப் பார்ப்பது. அதைவிட மிக முக்கியமானது, இருப்பவன் தன்னிடமிருப்பதை சுவிஸ் வங்கியிலோ, வங்கி கணக்கிலோ பூட்டி வைப்பதற்கு கிடையாது. தனக்கு எவ்வளவு தேவையோ, அதைத்தாண்டி இருப்பவையை இல்லாதவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

தற்போது ஆன்மிகத்தின் மீதான நாட்டம் இளைய தலைமுறையினரிடம் குறைவாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த தேசுமுகிப்பேட்டையில் உள்ள சிவனடியார் சிவதாமோதரனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தற்போது ஆன்மிகத்தின் மீதான நாட்டம் இளைய தலைமுறையினரிடம் குறைவாக உள்ளது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நமது குருமார்கள், தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி வரவேண்டும் எனக் கூறுகிறார்கள். 

இதையும் படிங்க;- ஆர்.எஸ்.எஸ்.காரராகவும், முழு நேர அரசியல்வாதியாகவும் தமிழக ஆளுநர்...! ஆர்.என்.ரவிக்கு எதிராக சீறிய திருமாவளவன்

ஆன்மீக ஆட்சி என்பது கோவிலில் நித்தியப்பூஜை செய்வது கிடையாது. அது ஆன்மீக ஆட்சியில் ஒரு பங்கு அவ்வளவுதான். சாதி, மதத்தை எல்லாம் தாண்டி மனிதனை மனிதனாகப் பார்ப்பது. அதைவிட மிக முக்கியமானது, இருப்பவன் தன்னிடமிருப்பதை சுவிஸ் வங்கியிலோ, வங்கி கணக்கிலோ பூட்டி வைப்பதற்கு கிடையாது. தனக்கு எவ்வளவு தேவையோ, அதைத்தாண்டி இருப்பவையை இல்லாதவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதே ஆன்மீக ஆட்சி. 

இதையும் படிங்க;- இரட்டை இலையை முடக்கி! ரஜினியை முன்னிறுத்தி பாஜக தலைமையிலான கூட்டணி.. பகீர் கிளப்பும் முன்னாள் எம்.பி..!

அப்படிப்பட்ட ஆன்மிக ஆட்சிக்குதான் பாஜக போராடுகிறது. ஆசை, காமம், குரோதம், பகை போன்ற எதுவும் இல்லாமல் சமநிலையில் அரசியல் செய்யக்கூடிய ஒரு மனிதர் வரும்போது ராமராஜ்ஜியம் பிறக்கும். அதற்காக நாம் அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.