oru nimusham thalai suththiduchchi is trending on twitter

செய்தியாளர் ஒருவர் என்னை பார்த்து உங்கள் கொள்கை என்னன்னு கேட்டாரு. எனக்கு அப்படியே ஒருநிமிஷம் தலை சுத்திருச்சுஎன அவர் பேசிய வார்த்தைஎன்கிற வசனத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு ரஜினியை வெச்சு செஞ்சி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார். அப்போது, வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனிக்கட்சி துவங்கி 234 தொகுதிகளில் போட்டியிடுவோம் என அறிவித்தார். தான் அரசியலுக்கு வருவது உறுதி எனவும், அது காலத்தின் கட்டாயம் எனவும், தெரிவித்தார். தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த போது ‘ எனக்கு அரசியலை கண்டு பயமில்லை. மீடியாவை பார்த்துதான் பயம். நேத்து திடீர்னு ஒரு ”செய்தியாளர் ஒருவர் என்னை பார்த்து “உங்கள் கொள்கை என்னன்னு கேட்டாரு. எனக்கு அப்படியே ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு”, என கூறினார். அன்று முதல் இணையத்தில் ட்ரெண்டிங் இதுதான். பலரும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் “ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி”, எனக் கூறியிருந்தார்.

ஒரு பக்கம் அரசியலுக்கு வருபவர் ஊடகங்களை கண்டு பயப்படலாமா? என்கிற விவாதம் மற்றொரு பக்கம் கொள்கை என்னவென்றே சொல்லாமல் ஆன்மீக அரசியல் ‘ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ என இதெல்லாம் ஒரு பதிலா என ‘ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ ஹேஸ்டேக்காக பயன்படுத்தி சமூக வலைத்தளமான டிவிட்டரில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டு வெச்சு செய்கின்றனர்.

தேர்தல்ல நின்னு நீங்களாவது 52 ஓட்டுக்கு மேல வாங்குவீங்களானு ஒருத்தன் கேக்குறான் எனக்கு அப்டியே #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சுpic.twitter.com/6N2XBuCejL

— V W F C ™ (@VIJAYWORLDFC) 5 January 2018

ரஜினி : என்னோட கொள்கை உண்மை உழைப்பு உயர்வு

சரவணா ஸ்டோர் ஓனர் : எனக்கு அப்டியே#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சுpic.twitter.com/MdtkNAQxdm

— Jìlla Kalí (@jillakali_offcl) 5 January 2018

நீங்க பிஜேபி பினாமியானு ஒருத்தன் கேட்டான்..
.#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சுpic.twitter.com/dycfdtmMSp

— Jìlla Kalí (@jillakali_offcl) 5 January 2018

விசுவாசம் படத்துக்கு அப்பறமும் சிவா கூடாதான் சொன்னாங்க

அஜித் பேன்ஸ் : #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு எங்களுக்கு 😂 pic.twitter.com/vPjwtDEkZI

— RamKumar (@ramk8059) 5 January 2018

சன்டிவில விஜய் நடிச்ச சுறா படம் போடுறாங்களாம் அத கேட்டு #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு
😂😂😂 pic.twitter.com/6v7abjoSDE

— 🔥சோமாஸ்கந்தன் தல🔥 (@somaskandan11) 5 January 2018

வாடகை பாக்கி ரசீது குடுத்தான்#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சுpic.twitter.com/BXNiI74Fyy

— ஆடலரசன் (@adalarasan2652) 5 January 2018

காலை பஸ் ஸ்டாண்டு போனா ஸ்ட்ரைக்குனு சொல்றானுங்க,
அங்கிட்டு ஒருத்தன் ஆண்ட்டிகிட்ட பாரதியார் கவிதை ஒப்பிக்குறான்..
எனக்கு #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சுpic.twitter.com/60NaTcWtqX

— குழந்தை அருண் New (@aruntwitzzz) 5 January 2018

நானும் அரசியல்க்கு வந்துட்டேன்
தமிழ்நாடு என்ன ஆகும்னு நினைத்து பார்த்தேன்...#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சுpic.twitter.com/oRcfNZghWi

— 💞 Ajith 💞 (@_Aji_Twittz) 5 January 2018

வெளிநாடு போகம்ன்னு ட்ட்ராவல் ஏஜேன்ஸிக்கு போனேன் அவன் பாஸ்போர்ட் வேணும்ன்னு கேட்கிறான் எனக்கு #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு
😂😂 pic.twitter.com/egIxr7p5nF

— இதயவன்🏂 (@VKtwitz_Vicky) 5 January 2018

ஐஸ்கிரீம் சாப்டலாம்னு வழக்கமாபோற பக்கத்து ஹோட்டலுக்கு போனேன். GST வந்தப்போ 2 scoop vanilla rs.70. GST கம்மிபண்ணதுக்குஅப்றோ இப்ப 150 ஓவாயாம். #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு திரும்பி வந்துட்டேன்.
நீ ரசத்த ஊத்து! pic.twitter.com/HtUI0X5Ym7

— அஸ்வினி நவீன்குமார் (@AswiniNavin) 5 January 2018

மனைவி சீக்கிரமே வீட்டுக்கு வாங்க சொன்னாங்க சரியின்னு கிளம்பி வெளியே வந்து பார்த்தால் சென்னையில பஸ் ஓடல அப்படியே எனக்கு....#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சுpic.twitter.com/YgxLRYDaLL

— Madhavan. c (@Madhavanc5) 5 January 2018

லட்சுமி #BusStrike அம்மா வீட்ல தங்கிக்கிறேன் சொன்னதும் !#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சுpic.twitter.com/yr6Ou5rw3b

— 😘 Vignesh 😘 (@vignesh7773) 5 January 2018

பொறியியல் படித்த என் நண்பனுக்கு வேலை கிடைச்சிடுச்சினு சொன்ன உடனே #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு

— வேதா தமிழ் (@Am_ShivaTamil) 5 January 2018

இந்த மாதிரி எழுத ரஜினிசாருக்கு கொஞ்சம் சொல்லி கொடுங்க.

அவர் தமிழ் பேசுனாலே எனக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திடும்#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு

— 🌟ஜேம்ஸ் பாண்ட்🌟 (@sridhar5531238) 5 January 2018

உண்மை, உழைப்பு & உயர்வு இதை கேட்டதும் சரவணா ஸ்டோர் ஓனருக்கு #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு

— RajasekarChem® (@RajasekarASho7) 5 January 2018

விஜய் படத்துக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ்னு சொன்னானுங்க...#ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சுpic.twitter.com/hlFTiEkBri

— பரத் (@barath_offl) 5 January 2018