ops will be general secretary as well as CM says madhusudhanan
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்த பேச்சுவார்தை தொடங்கியுள்ள நிலையில் பொதுச் செயலாளர் மற்றும் முதல் அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்க வேண்டும் என்று மதுசூதனன் வலியுறுத்தி உள்ளார்.
டிடிவி.தினகரன் மீதான அதிரடி வழக்கால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிடிவிக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து காய் நகர்த்தி வருவதால் முதல் அமைச்சர் எடப்பாடியும், மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் கலக்கத்தில் உள்ளனர்.

பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்த்துக் கொண்டால் பாதிப்புகள் குறையும் என்று டெல்லி மேலிடத்தில் இருந்து உத்தரவுகள் வந்ததால் அதிமுகவுக்குள் மீண்டும் அவரை இணைப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில் சூமூக உடன்பாடு எட்டப்படும் பட்சத்தில் அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முதல் அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திற்கே வழங்க வேண்டும் என்று மதுசூதனன் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.

பேச்சுவார்த்தையே தொடக்க கட்டத்தில் இருக்கும் போது பன்னீர்செல்வம் தரப்பு மிகப்பெரிய நிபந்தனையை முன்வைப்பது ஏற்புடையதாக இருக்காது என்கின்றனர் எடப்பாடி தரப்பினர்.
