கடிகாரத்தில் சின்ன முள் மேலிருந்து கீழ் வருவதும், கீழ் இருந்து மேலே போவது போல அரசியலில் நடக்கும் விளையாட்டில் சிக்குபவர்களின் நிலையும் அப்படிதான். 


கடிகாரத்தில் சின்ன முள் மேலிருந்து கீழ் வருவதும், கீழ் இருந்து மேலே போவது போல அரசியலில் நடக்கும் விளையாட்டில் சிக்குபவர்களின் நிலையும் அப்படிதான். தற்போது அரசியல் களத்தில் அதிமுக கடிகாரத்தில் எந்த முள் மேல் இருக்கிறது? 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஓ.பி.எஸ்- எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும் போட்டியில் எடப்பாடியாரின் கையே ஓங்கி இருக்கிறது. இதனால் சற்று அப்செட்டில்தான் ஓ.பி.எஸ் இருக்கிறார். சமீபத்திய அவரது பேச்சு கூட, நெருப்பின் நடுவில் சிக்கிக் கொண்டவர்களின் நிலையை எடுத்து காட்டாக கூறியிருந்தார். படை, பண பலத்தால் எடப்பாடி பழனிசாமி பலரை தன் பக்கம் கட்டி இழுத்துவிட்டதால், ஓ.பி.எஸ் பலம் இழந்து காணப்படுகிறார்.

சமீபத்தில் தன் துணைவி இறந்த நிகழ்வுக்கு திடீரென வந்த, சசிகலா, ஓ.பி.எஸின் கைகளை பிடித்து ஆறுதல் கூறியபோது, இவர் துக்கத்தை அடக்க முடியாமல், கண்ணீர் வடித்து தன் நன்றியை தெரிவித்தார். இது, எடப்பாடி பழனிசாமி தரப்பை சந்தேக வளையத்தில் வைத்திருக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரனும் தனது பழைய தொகுதியின் ஊருக்கே நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றதுடன், அவரும் துணையானவரின் தோளில் சாய்ந்து ஆறுதல் கூறிச் சென்றதும், சுற்றி நின்ற கட்சியினரில் ஓ.பி.எஸ் தரப்புக்கு சந்தோஷமும், எடப்பாடி தரப்பினருக்கு அதிர்ச்சியும் கொடுத்துள்ளது. 

எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுவிக்கும் வகையில், சசிகலா தரப்பினர் பலரிடமும் ஓ.பி.எஸிடம் நெருக்கம் காட்டி வருவதாக தொண்டர்கள் மத்தியில் பேச்சு ஓங்கி ஒலிக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு கணக்கு எழுதும் தீர்ப்பினைத் தொடர்ந்து முடிவெடுக்கும் நோக்கில் நாட்களை மெல்ல ஓ.பி.எஸ் நகர்த்தி வருவதாகவும் கட்சி மட்டத்தில் பேசிக்கொள்கிறார்கள். இனிமேல் தான் எந்த முள் கீழிருக்கும், மேலிருக்கும் என்பது தெரிய வரும் என்கிறார்கள்.