முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது முதலமைச்சர் பதவியை இழந்து ஒரு வருடம் ஆன நிலையிலும், பழைய நினைப்புலேயே இருப்பது அவரது இன்றைய நிகழ்வில் தெரியவந்துள்ளது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் தலைமையில் பல்வேறு விஷயங்கள் அலசப்பட்டதாக கூறப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, அனைவரும் புறப்பட்டனர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் புறப்பட ஆயத்தமானார். ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியே வந்த ஒ.பி.எஸ்., முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் காரை நோக்கி சென்றுள்ளார். 

அப்போது அங்கிருந்த பாதுகாவலர்கள், இது முதலமைச்சர் எடப்பாடியின் கார் என்று கூறினர். உங்களது கார் வேறொரு இடத்தில் நிற்பதாக கூறியதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் சுதாரித்துக் கொண்டார். பின்னர், தன்னுடைய கார் நின்று கொண்டிருந்த இடத்துக்கு சென்று காரில் ஏறி புறப்பட்டார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தற்செயலான செயல் என்றாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.