ஆறுக்குட்டி எம்எல்ஏ விலகியதையடுத்து  ஓபிஎஸ் அணி சார்பில் கிரீன்வேய்ஸ் சாலையில் அவசர கூட்டம் நடைபெற்று வருகிறது.

சசிகலாவிடம் இருந்து ஓபிஎஸ் அணி விலகியதில் இருந்து  அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர் கோவை கவுண்டன்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுக்குட்டி.

ஓபிஎஸ் அணியில் அவருக்கு, உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. வருகிற 29-ந் தேதி கோவையில் மாவட்ட ஓபிஎஸ்  அணியின் செயல் வீரர்கள் கூட்டம் கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு பந்தல் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியை அவர் புறக்கணித்தார்.  

இதனால் அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணிக்கு மாற போவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஓபிஎஸ்  அணியில் இருந்து ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. திடீரென்று விலகினார்.

இந்நிலையில்  இன்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமியை சந்தித்த எம்.எல்.ஏ. ஆறுகுட்டி அவரது அணியில் இணைந்தார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் அணியினர், ஆறுக்குட்டி எம்எல்ஏ  விலகியதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் அவசர கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில்  ஆறுக்குட்டி எம்எல்ஏ ஏன் விலகினார் ? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விவாதித்து வருகின்றனர். 

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கன் கே.பி.முனுசாமி, மாபா பாண்டியராஜம், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் எம்.பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளன.இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது