அதிமுக உறுப்பினராக கூட இல்லாத டிடிவி தினகரன் என்னை மீண்டும் அதிமுகவிற்கு அழைப்பது வேடிக்கையாக உள்ளது என்று ஓபிஎஸ் கிண்டலாக கூறினார்.
டிடிவி தினகரன் உங்களை மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் ஏற்றுகொள்வதாக கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ் கூறியதாவது:

புரட்சித்தலைவரால் உருவக்கப்பட இயக்கம் , அம்மா தலைமையில் வளர்ந்த அதிமுக வரலாறு என்பது எந்த குடும்பத்தினருடைய ஆதிக்கத்தின் கீழ் சென்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
2011 அம்மா அவர்கள் அனைவரையும் வெளியேற்றி விட்டார்கள். அதன் பிறகு சசிகலாவை மட்டுமே இணைத்தார். இவர்கள் அனைவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் நீக்கப்பட்டவர்கள். ஜெயலலிதா தனது மறைவு வரை இவர்களை கட்சியில் இணைக்கவே இல்லை.

கட்சி உறுப்பினர் அந்தஸ்த்து கூட இல்லாதவர் டிடிவி தினகரன். இவர்கள் வந்து கட்சியில் அமர்ந்து எங்களை அழைப்பது வேடிக்கையாக உள்ளது.
இந்த நிலை மாறும் விரைவில் மக்கள் நல்ல தீர்ப்பை அளிப்பார்கள் . இந்த கும்பல் விரட்டி அடிக்கப்படுவார்கள்.இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.
