மக்கள் விரும்பாத ஆட்சி தூக்கியெறியப்படும்….ஜெ.நினைவிடத்தில் ஓபிஎஸ் சபதம்…
கடந்த 15 நாட்களாக நீடித்து வந்த அதிகாரப் போட்டி இன்று நிறைவு பெற்றது.எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நேற்று ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டது.
நாளை எடப்பாடி பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார்.
அதே நேரத்தில் ஓபிஎஸ் நேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து,ஆதரவு திரட்டப் போவதாகவும் தெரிவித்தார்.
எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதிக்கு சென்று பொது மக்களை தேடிச்சென்று யாருக்கு ஆதரவு அளிக்கலாம் என கேட்டு தெரிந்து கொண்டு அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளியுங்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில்ஜெ நினைவிடத்தில் ஓ.பி.எஸ், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், பொன்னையன், பி.எச்.பாண்டியன், செம்மலை, மாபா பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோருடன் மலர்தூவி மரியாதை செய்தனர்*
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் ,ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கிய சசிலா குடும்பத்தினர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை தர்மயுத்தம் நடத்தி கொண்டு வருவோம் என்றும் தெரிவித்தார்.
இன்று முதல் ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை சந்திக்க உள்ளோம். அதிமுக தொண்டர்கள் எங்களை தான்ஆதரிக்கிறார்கள் என தெரிவித்தார்.
மக்கள் விரும்பாத சசிகலாவின் குடும்ப ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
