தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தேனியை சேர்ந்த மிலானி என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். 

தமிழகத்தில் நடத்து முடிந்த மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுகவில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். அப்போதே தேனி மக்களவையில் தொகுதியில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் பணப்பட்டுவாடா செய்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார் என இளங்கோவன் குற்றச்சாட்டு முன்வைத்தார். அவரது வெற்றியை எதிர்த்து விரைவில் வழக்கு தொடர்வேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரின் எம்.பி பதவிக்கும் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, தேனி தொகுதியை சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். 

அதில், தேனி தொகுதியில் மக்களவை தேர்தல் நடைபெற்ற போது, வாக்குகளைப் பெற மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதனை அதிமுகவினர் திட்டமிட்டு அரங்கேற்றி உள்ளனர். தேனி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி செல்லாது என அறிவிக்கக் மனுவில் தெரிவித்துள்ளார்.