முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி தேனியில் 5,001 விளக்கு பூஜையுடைன் சம்பூதிகரணம் மகா யாகம் இன்று நடத்தப்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற அதிமுகவினர் பல்வேறு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.
மண்சோறு, அங்கபிரதட்சணம், தீச்சட்டி ஏந்துதல், பால்குடம் ஏந்துதல் என அதிமுகவினர் நேர்த்திக்கடன் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாது சர்ச்சுகள் மற்றும் மசூதிகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில், 5,001 விளக்கு பூஜையுடன் சம்பூதிகரணம் மகா யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் அதிமுக பொருளாளரும், அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த யாகம் நடைபெற்றது.
இந்த யாகத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
