மறைந்த முதல்வர் ஜெ.பிறந்தநாளை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

அம்மாவின் மரணம் குறித்த பல்வேறு சந்தேகக்ங்கள் உள்ளது. மக்கள் இதயத்திலும் அந்த வடுக்கள் ஆழமாக இருக்கிறது. அந்த சந்தேகங்கள் நீக்கப்பட விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும். 

எடப்பாடி பழனிச்சாமிக்கு உண்மையைலேயே அம்மா மீது அக்கறை இருந்தால் , அவர்கள் மீது அக்கறை இருந்தால் உரிய விசாரணை அமைக்க வேண்டும். 

மரணத்தில் மிகப்பெரிய சந்தேகம் உள்ளது. அதை நீக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. அதிலும் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் வெளிவரும். 

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.