ops pressmeet in greenways road
சென்னை கிரீன் வேஸ் சாலையில் ஒபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது தாங்கள் மேற்கொண்டுள்ள தர்மயுத்தத்திற்கு இப்போதுதான் முதல் வெற்றி கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
தொண்டர்களின் விருப்பமாகவும், புரட்சி தலைவியின் கொள்கையை கடைப்பிடிக்கும் நோக்கில் தர்மயுத்தத்தில் களமிறங்கினோம். அதற்கான விடிவெள்ளி இப்போதுதான் கிடைக்க தொடங்கியுள்ளது என ஒபிஎஸ் தெரிவிதுள்ளார்.

எந்த நோக்கத்திற்காக இந்த தர்மயுத்தம் தொடங்கப்பட்டதோ, அதன் முதல் வெற்றியாக தற்போது சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரின் குடும்பதையே கட்சி மற்றும் கழகத்திலிருந்து நீக்கி இருக்கிறார்கள்.
தற்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு இணங்க கட்சியின் அடுத்த நகர்வு இருக்கும் என ஒபிஎஸ் தெரிவித்துள்ளார்
