ops next join with thirumavalavan
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சி வேட்பாளராக போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவு கேட்டும், பிரச்சாரத்திற்கு தங்களுடன் வரும் படி அழைக்கவும்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார் ஓ.பன்னீர் செல்வம்.
சென்னையில் ஜி.கே.வாசனின் இல்லத்தில் இருவரின் சந்திப்பும் நடைபெற்றது. அப்போது வரும் 8 ஆம் தேதி இருவரும் இணைந்து ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்தும் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவு பட்டு ஓ.பி.எஸ் . அணி தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டால் அதிக இடங்களை கைப்பற்ற முடியாது என்று கணக்கிட்டுள்ள ஓ.பி .எஸ், கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளார்.
அதன் முதல்கட்டமாக ஜி.கே.வாசனை தன் பக்கம் இழுத்துள்ள, ஓ.பி.எஸ். அடுத்த படியாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை சந்திக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
