ஆளுநர் மாளிகை:
கிண்டி ராஜ்பவன் ஆளுநர் மாளிகையை வந்தடைந்த ஆளுனர் வித்யா சாகர் ராவை சந்திக்க முதல்வர் பன்னீர் செல்வம் கிண்டி ராஜ் பவனை வந்தடைந்தார்.
யாரெல்லாம் உடனிருகின்றனர் :
நத்தம் விசுவநாதான், பி. எச் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர். மேலும் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரும் அவருடன் பக்க பலமாக வெளியில் காத்துக்கிடக்கின்றனர்.மேலும் அதிமுக அவைத்தலைவர் மது சூதனனும் ஓபிஎஸ் உடன் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன பேசிவார் ஒபிஎஸ்
ராஜினாமாவுக்காண காரணத்தை , ஆளுநர் வித்யா சாகர் ராவிடம் தெரிவித்தார். மேலும், நிர்பந்தம் காரணமாகத்தான் தன் முதல்வர் பதவியை ராஜினமா செய்தேன் என்றும் ஏற்கனவே தெரிவித்து இருந்தார் ஒபிஎஸ் . இந்த அனைத்து தகவலையும் ஒ பி எஸ் ஆளுநரிடம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ,தமிழகத்தில் நிகழும் அசாதாரண அரசியல் சூழலை, எவ்வறு எதிர்கொள்வது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. ஆளுநர் உடனான இந்த சந்திப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு முக்கிய திருப்பமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை
