Jayalalitha asked to investigate the death of the righteous
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு , ஒபிஎஸ் அணியினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இடங்களிலெல்லாம் , கூட்டம் அலைமோதுகிறது .

கிருஷ்ணகிரி ,ஆவடி, திருச்சி, நாமக்கல்,மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் 2௦ ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டதால், மாற்று அணியினருக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க, சசிகலா அணியை சேர்ந்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி நெல்லை, உள்ளிட்ட மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் புதிய திட்டங்களை துவங்கி வைப்பதற்காக வருகை தந்தார் .
மதுரையிலிருந்து, நெல்லை வந்து அங்கிருந்து பாளையங்கோட்டையில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார் எடப்பாடி. திருநெல்வேலியிலிருந்து பாளையங்கோட்டை வரை, பொதுமக்களால் இடையூறு ஏற்படாத வண்ணம் இருக்கவும், கூட்டம் அதிகமாக கூடினால் சமாளிக்கவும் மூங்கில் மற்றும் சவுக்கால் தடுப்புகள் கட்டப்பட்டிருந்தன .

ஆனால் போலீசாரும் மாவட்ட நிர்வாகமும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல், எடப்பாடி சென்ற சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன .
மாறாக அதிமுக தொண்டர்கள் பெரும்பாலோனோர் ஒபிஎஸ் அணியினர் நடத்தும் உண்ணாவிரதத்திற்கு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

முதலமைச்சரின் வருகையை அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தும் ,நகர்புரத்தில் கூட மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளிக்கப்படாததால் அதிமுகவின் ஆளும் தரப்பு பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளது.
