குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்த போராட்டம் மற்றும் புதுக்கோட்டை பொதுக் கூட்டம் போன்றவை தேதி குறிப்பிடாமல் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது..

தி.மு.க. அணிகள் இணைப்பு முயற்சி தோல்வி அடைந்த நிலையில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து ஓபிஎஸ் அணி சார்பில் , கடந்த 10 தேதி , போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த போராட்டம் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது..

இந்நிலையில்  இந்த போராட்டம் திடீர் என்று ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ஓபிஎஸ்  அணி அறிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் வருகிற 19-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதால் ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் அணியைச்சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண் டியராஜன் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே புதுக்கோட்டையில் வருகிற 19-ந் தேதி நடைபெற இருந்த ஆலோசனை கூட்டமும்  ஒத்தி வைக்கப்படுவதாக  தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல காரணங்கள் சொன்னாலும், இரு அணிகள் இணைப்பு தொடர்பாக ஓபிஎஸ்,  பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அதன்பிறகும் பேச்சு வார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இணைப்பு முயற்சிக்காகவே ஆர்ப்பாட்டமும், கூட்டமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.