பொங்கல் பண்டிகை கட்டாய விடுப்பு லிஸ்டில் இல்லை என ஒரு கருத்து வெளியானதை அடுத்து வரும் பொங்கலுக்கு அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் ஓபிஎஸ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஓ.பன்னீர் செலவம் எழுதிய கடிதத்தில் பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலக்ங்களுக்கு கட்டாய விடுப்பு வழங்க வேண்டும். 

அதே போல் திருவள்ளுவர் தினத்துக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.இனி வரும் காலங்களில் அனைத்து ஆண்டுகளிலும் மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.