பரபரப்பான அரசியல் சூழலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து நேற்று மாலை 3.30 மணிக்கு விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். அவர் வருகையை அறிந்த நிருபர்கள் பீளமேடு விமான நிலையத்தில் குவிந்தனர். அப்போது அவரின் வருகை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு `நான், எனது சொந்த விஷயமாக கோவை வந்துள்ளேன்’ என பதில் அளித்துவிட்டு உடனடியாக காரில் ஏறி, சென்றுவிட்டார்.

அவர், கோவை கணபதி காந்திமாநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரது  பாதுகாவலர்கள் கூறுகையில், `முதுகு வலிக்கு இயற்கை முறையில் சிகிச்சை பெற துணை முதல்வர் கோவை வந்துள்ளார். ஐந்து நாள் இங்கு தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெறுவார்’ எனத் தெரிவித்தனர்.