ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கை விரைவாக விசாரிக்க முடியாது என மறுத்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கக் கோரி திமுக சாரிபில் திமுக சக்கரபாணி, அமமுக சார்பில் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுமீது பல கட்ட விசாரணை நடைபெற்று முடிந்த நிலையை இறுதி விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்நிலையில் வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உறுதியாக கூறி தீர்பு வழங்கி உள்ளது.  ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பல பிரிவுகளாக பிரிந்தது. பின்னர் சசிகலா ஆதரவுடன் ஆட்சியமைத்தது எடப்பாடி அரசு.

 

அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டது. கட்சி கொறாடா உத்தரவை மீறி ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 11 பேர் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர்.