ops eps honored jayalalithaa memorial

 ஓபிஎஸ் - இபிஎஸ் இணைப்பிற்கு பிறகு, புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்க உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் ஒன்றாக இணைந்து மெரினாவில் அமைந்துள்ள ஜெ நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மண்டியிட்டு மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் மற்றும் கட்சிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்

இவர்கள் இருவரம் நினைவிடத்தை சுற்றிவந்து மீண்டும் வணங்கினர். ஓபிஎஸ் 6 மாதங்களுக்கு முன், ஜெ நினைவிடத்தில் தான் அவருடைய தர்மயுதத்தை தொடங்கினார். தற்போது அவருடைய தர்ம யுத்தத்திற்கு கிடைத்த வெற்றிக்கு நன்றி சொல்ல, மண்டியிட்டு மரியாதை செலுத்தியுள்ளார் ஓபி எஸ். இதனை தொடர்ந்து எம் ஜிஆரின் நினைவிடத்திற்கு சென்றும் மரியாதை செலுத்தினர்.

அம்மாவின் ஆசியோடு இன்று துணை முதல்வராக பதவியேற்க உள்ளார் ஓ பி எஸ்