ops answer about rajini
ரஜினி அரசியலுக்கு வரும்பட்சத்தில் பாஜக மற்றும் ரஜினியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு ஓ.பி.எஸ். மழுப்பலாக பதிலளித்தார்.
டெல்லியில், பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மனு தாக்கலில் கலந்து கொள்ள வந்த ஓ.பி.எஸ். செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ்., ரஜினி அரசியல் பிரவேசம் என்பது, அவருடைய சொந்த விருப்பம். இது பற்றி நானொன்றும் கருத்து தெரிவிக்க முடியாது என்று தெரிவித்தார்.
ரஜினி அரசியலுக்கு வரும் பட்சத்தில், ரஜினி - பாஜக அணியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பீர்களா என்று செய்தியாளர்கள் மடக்கி கேட்க, தேர்தல் வரும் நேரத்தில் அன்றைய சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுப்போம் என்று ஓ.பி.எஸ். மழுப்பலாக பதிலளித்தார்.
