திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருப்பது பற்றி பேசினார்.

அப்போது 2009 ஆம் ஆண்டு அவர் சிங்கப்பூர் பயணம் சென்றார், கூவம் நதியை புனரமைப்பதற்காக சிங்கப்பூர் செல்வதாக சென்றார். ஆனால் அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டு வந்ததும் எதுவும் நடக்கவில்லை. திமுக ஆட்சிக் காலத்தில் அவரது வெளிநாட்டுப் பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்டபோது அவர் கொடுத்தாரா ? என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணம் ஆக்குவதற்குத்தான் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வதாக கூறப்படுவது ,  ஜமுக்காளத்தில் வடிகட்டிய உண்மைக்கு மாறான பொய்த் தகவல் என  மறுத்தார்.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், எனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே  நல்ல புரிந்துணர்வு இருக்கிறது, நல்ல ஒற்றுமை உணர்வு இருக்கிறது. சுமுகமாக போய்க் கொண்டிருக்கிறது. நீங்கள்தான் பிரிக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறீர்கள்,. அது ஒரு போதும் நடக்காது என செய்தியாளர்களைப் பார்த்து கேட்டுவிட்டு  என்று சிரித்துக் கொண்டே சென்றார்..