Asianet News TamilAsianet News Tamil

அண்ணேண்டா... தம்பிடா... சித்தி கொடுத்த தைரியத்தால் மெரினாவுக்கு கிளம்பிய ஓ.பி.எஸ்- இ.பிஎஸ்..!

சசிகலா டி.நகரில் அஞ்சலி செலுத்திவிட்டதால், அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வரமாட்டார் என தெரிந்து கொண்டே எடப்பாடியாரும், ஓ.பி.எஸும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு தைரியமாக வந்ததாகக் கூறப்படுகிறது.  

OPS and EPS left for Marina due to the courage given by Sasikala
Author
Tamil Nadu, First Published Feb 24, 2021, 11:30 AM IST

போடி தொகுதியில் போட்டியிட கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தொகுதியில் போட்டியிட கழக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். OPS and EPS left for Marina due to the courage given by Sasikala

மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 73 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர். அந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள தொகுதிகளுக்கு விருப்பமனு தாக்கல் செய்தனர். அதன்படி எடப்பாடி பழனிசாமி இடைப்பாடி தொகுதிக்கும், ஓ.பி.எஸ் போடி நாயக்கனூர் தொகுதிக்கும் விருப்ப மனுவை தாக்கல் செய்தனர். OPS and EPS left for Marina due to the courage given by Sasikala

அதேபோல் விருப்ப மனு தாக்கல் செய்ய அடுத்த மாதம் 5ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனுவை தாக்கல் செய்யலாம் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த விழாவின் போது ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இருவரும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர்.OPS and EPS left for Marina due to the courage given by Sasikala

இந்நிலையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ்-எடப்பாடி இருவரும் சேர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அங்கு அமைக்கப்பட்டுள்ள 8,555 சதுரடி அருங்காட்சியகத்தை அவர்கள் திறந்து வைத்தனர். சசிகலா டி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அவர் அஞ்சலி செலுத்திய 20 நிமிடங்களில் எடப்பாடியாரும், ஓ.பி.எஸும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்துள்ளனர். அதாவது சசிகலா டி.நகரில் அஞ்சலி செலுத்திவிட்டதால், அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வரமாட்டார் என தெரிந்து கொண்டே எடப்பாடியாரும், ஓ.பி.எஸும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு தைரியமாக வந்ததாகக் கூறப்படுகிறது. 


 

Follow Us:
Download App:
  • android
  • ios