புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராஜன் மறைவுக்குக் முதலமைச்சர், துணை முதலமைச்சர்  உள்ளிட்டோர் இரங்கல்  கூட தெரிவிக்காதது தெரிவிக்காதது பண்பாடற்ற செயல் என்றும்  நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார். 

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தது கொண்ட நடராஜன் கடந்த 4 மாதங்களாக சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென நெஞ்சவலி ஏற்பட்டதால் பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று திகாலை 1 35 மணிக்கு நடராஜன் மரணமடைந்தார்.

இதையடுத்து  அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.  திமுக செயல் தலைவர் ஸ்டாலின், வைகோ,வீரமணி, பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து  அவரது உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைத் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நடராஜன் உயிருடன் இருக்கும் போது சசிகலா பரோலில் வர, அதிமுக எம்.பி.க்களில் ஒருவர் கூட கையெழுத்து போடாதது  தனக்கு மிகுந்த வேதனை  அளிப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே நடராஜன் மறைவுக்குக் முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரங்கல் தெரிவிக்காதது பண்பாடற்ற செயல் என்றும் சீமான் கூறியுள்ளார்.