திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் இஸ்லாமிய மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனை முதல்வர் அப்போதே உறுதி செய்தார்.

இதனுடைய நோக்கம் புரிந்து கொள்ளாமல் திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் நோக்கத்திற்காக தவறான கருத்தை மக்கள் மத்தியில் திணித்து வருகின்றன. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை என்பதால் தற்போது விரக்தியில் உள்ள திமுகவினர் உள்ளாட்சித் தேர்தலை கையிலெடுக்க இவ்வாறு செய்து வருகின்றனர். ஆனால் எவ்வளவு போராடினாலும் மக்கள் மிக தெளிவாக உள்ளார்கள். 

அதிமுக-திமுக ஆட்சியின்போது தமிழகத்தில் எவ்வித மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் எந்த ஆட்சியில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து மிக தெளிவாக மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள். அதிமுக ஆட்சியில்தான் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளும் பூர்த்தி ஆகி உள்ளது. எனவே திமுக எப்படி போராடினாலும் அதிமுகவுக்கு கிடைக்கக்கூடிய வாக்கு வங்கி குறையாது என தெரிவித்து உள்ளார் ஓபிஆர்.