Asianet News TamilAsianet News Tamil

"9 மாசம் என்ன கிழிச்சீங்க.." வைகோ மகனை டார் டாராக கிழிக்கும் மதிமுகவினர்.. புலம்பும் வைகோ !

வைகோ மகன் துரை வையாபுரி தலைமைக்கழக செயலாளராக நியமிக்கப்பட்டதன் எதிர்ப்பு, நாலாபக்கமும் வெடித்து கிளம்பி உள்ளது.

Opposition to the appointment of Vaiko son Durai Vaiyapuri as General Secretary has erupted on mdmk party issue
Author
Tamilnadu, First Published Mar 23, 2022, 12:19 PM IST

வைகோ மகனுக்கு பொறுப்பு :

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி கட்சியில் பொறுப்பு வழங்குவதற்கு மூத்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் என்று 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். 

Opposition to the appointment of Vaiko son Durai Vaiyapuri as General Secretary has erupted on mdmk party issue

மதிமுகவிற்காக எந்த  உழைப்பும் , தியாகமும் செய்யாத துரை  வைகோவிற்கு பொறுப்பு வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மதிமுகவை திமுகவில் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.  இதனால் தலைமை கழகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மூத்த நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

வாரிசு அரசியல் :

இந்நிலையில் சென்னையில் நடைபெறும் மதிமுக பொதுக்குழுவில் கட்சிக்கு எதிராகக் கருத்துக் கூறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மதிமுகவில் மூன்று மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில்  பொதுக்குழு இன்று கூடியது. திமுகவுடன் மதிமுகவை இணைக்க 3 பேரும் வலியுறுத்தினர். 

இதனால்  கட்சிக்கு எதிராகக் கருத்து கூறி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் வைகோவுக்கு அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் தலைமை கழக செயலாளராக துரை வைகோவை நியமிக்கவும் பொது குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்த நிலையில்  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

Opposition to the appointment of Vaiko son Durai Vaiyapuri as General Secretary has erupted on mdmk party issue

புலம்பும் வைகோ :

இதன் மூலம் மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இந்த கூட்டத்தை மதிமுகவின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, சிவகங்கை, விருதுநகர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.வைகோவின் மகன் துரை வையாபுரிக்குத் தலைமைக் கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதைக் கண்டித்து இந்த புறக்கணிப்பு நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios